உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

267

குரவன்மார் மூவர்க்கும் பின்னிருந்தாரெனக் கூறுதல் போவியா யொழியு மென்று ணர்க. இது கிடக்க.

னி, நாம் மேலே விளக்கிய தருக்கவுரையின்கட் கருத்தொருப் பாடிலராய் 'யாம்பிடித்த முயலுக்குக்கால் மூன்றே' என்னும் வழக்குப் பற்றி ஏனைக்குரவன்மார் மூவரும் மாணிக்கவாசகரைத் தந்திருப்பதிகங்களுட் கிளந்தெடுத்துக் கூறாமையான் அவர் அம்மூவர்க்கும் பின்னிருந்தாரென்பது தேற்றமாமென வுரைப்பார், அற்றேல் அம்மூவர்க்கும் பின்னிருந்த மாணிக்கவாசகர் தாமருளிச்செய்த திருவாசகந் திருக்கோவை யாருள் அம்மூவரையுங் குறிப்பிட்டு ஏது முரையாமை யென்னையென எதிர்கடாவுவார்க்கு விடுக்கு மாறறியாது விழிக்குநீரரவராகலின், அங்ஙனம் அழிவழக்குப் பேசுதல் பெரியதோர் ஏதமாமென் றுணர்ந்து கொள்க. அல்லதூஉந், திருவாசகந் திருக்கோவையாரின் கட் காணப்படும் தமிழ்ப்புலனெறி வழக்கிற்கும், தேவாரத் திருமுறையின் றமிழ்ப் புலனெறி வழக்கிற்கும் வேறுபாடு பெரிதாகலானும், அவற்றுள்ளும் முன்னையவற்றில் தமிழ்த் தொன்மை வழக்கே பெரும்பான்மையும் பயின்று வருதலானும், அவ்விரு வழக்கிற்கும் டையி யிட்ட காலம் சிறியதாதல் செல்லாது. தமிழ்த் தொன்மை வழக்கே தழீஇ வந்த திருவாசகந் திருக்கோவையா ரென்பன, தமிழ்ப் புதுவழக்கு இடையிடையே விராய்வந்த தேவாரத் திருமுறைக்குப் பின்னெழுந்தன வென்றல் பெரியதோர் தலைதடுமாற்றமாய் அங்ஙனங் கூறிவிடுவார் தமிழ் வழக்கு ஒரு சிறிது மறியாரென்பதனைப் பெறுவிக்கும். ஆகலின், அவ்வாறு கூறுதல் எவ்வாற்றானும் பொருத்த மில்லாத போலியுரையா மென்க.

ஈண்டுக்கூறியவாற்றால் போப்புத்துரை யுரைத்தவாறு ஞானசம்பந்தப் பிள்ளையார்காலம் கி.பி. பதினோராம் நூற்றாண்டின் கண்ணதாதல் ஆங்கில நூல்வல்லார் செய்து போதருஞ் சரிதவாராய்ச்சிக்கு மாறுபாடாய் முடிந்திடுதலின் அவர்காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பாதிக் கண்ணதென்று கோடலே உண்மைச் சரிதமுறையா மென்ப தூஉம், ஞான சம்பந்தப் பிள்ளையாரோ டொருங்கிருந்த அப்ப மூர்த்திகள் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பாதி முதற்கொண்டு தொடங்குதலின் அவ்வப்பமூர்த்திகளாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/292&oldid=1574717" இலிருந்து மீள்விக்கப்பட்டது