உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

– 8

  • மறைமலையம் 8

குறித்தருளப்பட்ட நரியைக் குதிரையாக்கிய திருவிளை யாடனிகழ்ச்சியும் அந்நிகழ்ச்சிக் கேதுவாயிருந்த மாணிக்க வாசகர் காலமும் அவ்வாறாம் நூற்றாண்டின் முற்செல்லுமா மென்பதூஉம், திருவாசகச்செய்யுள் வழக்குக் கடைச்சங்கத் தார் காலத்துச்செய்யுள் வழக்கோடு பெரிதொத்துச் சிறிதொவ்வா மையானும் தேவாரச்செய்யுள் வழக்கோடு சிறிதொத்துப் பெரிதொவ்வாமையானும் அஃதவ் விருவகை வழக்கும் விராய்வருதற்கேற்ற கி.பி. மூன்றாம் நூற்றாண்டின்கண் எழுந்ததெனலே வாய்ப்புடைத்தாமென்பதூஉம், ஞான சம்பந்தர் முதலான சமயகுரவர் தந்திருப்பதிகங்களுள் மாணிக்கவாசகரைக் கிளந்தெடுத்து மொழியாமைபற்றி அவர் அம்மூவர்க்கும் பின்னிருந்தாரெனக் கூறுதல் ஒருவாற்றானும் பொருந்தாத போலியுரையாமென்பதூஉம் இனிது

விளக்கப்பட்டன. தமிழ்ப் புலமைமலிந்த வித்துவசிகாமணிகள் ன்னோரன்ன சரிதவாராய்ச்சியைப் பழித்துச்சோரவிடாது கைக்கொண்டாய்ந்து நலம் பெருக்குவரென்னுந் துணிபால் இதனை யொருதூண்டுதற்கருவியாக முன்னெழுதிவிடுத்தாம். சுவேதா சுவதரோபநிடத மொழியெர்ப்பு

அங்குட்ட மாத்திரையாய் ஞாயிறுபோற் சுடர்ந்து விளங்கும் அவன், சங்கற்பமும் அகங்காரமும் அறிவுத் தன்மையும் தன் சரீரத்தின் றன்மையும் உடையோனாய்க், கசை நுனியிலுள்ள இரும்பு அக்கசையின் வேறாய்க் காணப்படுமாறு போல மற்றையதின் வேறாகக் காணப்படுகின்றான். (8)

நூறு கூறிடப்பட்ட ஒரு ஒரு மயிர்முனையின் நூறில் ஒருபாகம் போலச் சீவன் கருதப்படற் பாலதாம்; அவன் அளவறியப்படாதவனாவன்.

(9)

அவன் பெண்ணுமல்லன், ஆணுமல்லன், அலியுமல்லன், அவன் தானெடுக்கும் உடம்பின்றன்மையாய் விளங்குகின்றான்.

(10)

உண்ணல் பருகுதலாற் சரீரம் வளர்ச்சியுறுமாறு போலச், சங்கற்பம், பரிசம், திருட்டி, மயக்கமுதலியவற்றாற் சீவான் L மாவானது தன் கருமத்திற்கீடாகப் பலவேறு தேகங்களைப் பலவேறிடங்களில் முறைமுறையே எய்துகின்றது.

(11)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/293&oldid=1574718" இலிருந்து மீள்விக்கப்பட்டது