உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

269

சீவான்மாவானது தன் குணங்களாலேயே பலப்பல வானதூல சூக்கும தேகங்களை அடைகின்றது; தன்னிலே வேறுபாடுடையதன்றாயினும், தன்னுடைய கன்மவியல் பானும் உடம்பினியல்பானும் அஃது அவ்வுருவங்களோடு ஒற்றுமை யுறுதற்காரணந் தோன்றுகின்றது.

(12)

உண்ணுழையப்படாத

ஆதியந்த மில்லோனாய், விதனுள்ளிருந்து உலகைப் படைத்திடுவோனாய், அநேகரூப முடையோனாய், விசுவைகனாயுள்ள ஈசுரனையார் அறிகின் றார்களோ அவர்கள் எல்லாப் பாசங்களினின்றும் விடு படுகின்றார்கள். (13)

அறிவினாலறியப்படுவோனாய்ச், சேதனனாய், உள்ளது மில்லதுமாய் எல்லாவற்றிற்குங் காரணனாய்ச் சிவனாய்ப், பாகங்களெல்லாம் உற்பத்தியாதற் காரணானாயுள்ள அக்கடவுளை அறிகின்றவர்கள் தந்தேகங்களை விடுகின் றார்கள்.

ஐந்தாம் அத்தியாயம் முடிந்தது.

ஆறாம் அத்தியாயம்

காரணமாமென்பர்,

துறவிகளிற்சிலர் மயக்க வுணர்ச்சியாற் பொருள்களின் சுபாவத்தன்மையே உற்பத்திக்குக் வேறுசிலர் காலமேகாரணமாமென்பர், ஆனால், உலகத்தில் இறைவன் முதன்மையாற்றான் பிரமசக்கிரஞ் சுழலுகின்றது. (1)

நித்திய வியாபகனாய்ச் சருவஞ்ஞனாய்க் காலகாலனாய் எல்லாக் குணங்களு முடையோனாய் எல்லா மறிவோனாய் உள்ள அவனாலே ஆளப்பட்டு நிலநீர் தீவளிவிண் என்று நினைக்கப்படுவதாகிய சிருட்டியானது சுழலுகின்றது.

(2)

இக்கருமத்தினை யியற்றி அதன்கண் திரும்பவும் ஒற்றித்து நின்று ஒன்று இரண்டு மூன்று அல்லது எட்ட னோடும், காலத்தோடும், ஆன்மாவின் சூக்கும குணங்களோ டுமாக ஒருதத்துவத்துடன் மற்றொரு தத்துவத்தினை அவன் இயைத்துவிடுகின்றான்.

(3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/294&oldid=1574719" இலிருந்து மீள்விக்கப்பட்டது