உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

மறைமலையம் -8 8

அவை

குணங்களோடு கூடிய கருமங்களைச் செய்து முடித்தபின் யார் அவற்றையும் தம் அன்பு முழுவதினையும் இறைவன் மாட்டுப் பதியவைக்கின்றார்களோ அவர்கள் யின்மையின் காரியங்களுமில்லா தொழிகின்றனவாகலான் சருமவொழிவினால் தத்துவங்களின் வேறாய் நிற்பதனை எய்துகின்றார்கள்.

(4)

அவன் சையோக நடத்தற்குரிய காரணங்களுக்கு நிமித்த காரணனாய் ஆதியாயிருக்கின்றான், மூன்றாகப் பகுக்கப்படுங் காலதத்துவத்தினைக் கடந்து அவன் காலமின்றி விளங்கு கின்றான்; பவபூதனாய்த் தன்னிதயத்தில் வசிப்போனாய் விசுவரூபனாயிருக்கின்ற வழிபாடு கடவுளை உள்ளத்தின் கண் யார் உபாசிக்கின்றார்களோ அவர்கள் தத்துவங்களின் வேறாய் நிற்பதனை எய்துகின்றார்கள். (5)

-

மாயாமரங் கால மிவற்றினுருவங்களினும் பெரி யோனாய், அவற்றின் வேறுமாய்ப் பிரபஞ்சஞ்சுழன்று செல்லு நிலைக் களனாய், அறத்தை நிறுத்திப் பாவத்தை அழிப்போனாய், ஒருவனான்மாவினுள் விளங்குஞ் சோதி முதல்வனாயுள்ள அவனை யார் அறிகின்றார்களோ அவர்கள் மரணத்தைக் கடக்கின்றார்கள்.

L

(6)

அவனைத் தேவர்கட்கெல்லாம் மேலான மகேசுர னென்றும், பதியென்றும், பெரியதினெல்லாம் பெரிய னென்றும், சோதியனென்றும், புகழப்படும் புவனேச னென்றும் அறிகின்றோம்.

அவனுக்குக் காரியமுமில்லை

(7)

காரணமுமில்லை; அவனை யொப்ப தூஉம் மிக்கதூஉம் யாரானுங்காணப்பட ல்லை; அவனுடைய பராசத்தியானது பலவேறியற்கை யுடையதென்று சொல்லப்படுகின்றது; அஃது அவன்கட் சுபாவமாய்ச் சார்ந்து நிற்றலேயன்றி ஞானங்கிரியைகட் கேற்ற வாறுந் தொழிற்படு கின்றது.

(8)

இவ்வுலகத்தின்கண் அவனுக்கு மேலான பதியுமில்லை, மேலான ஈசனுமில்லை, காரணமுமில்லை, அவனே காரணன், காரணனான அதிபதிக்கும் அவன் அதிபனாவன்; அவனைப் பிறப்பிக்கின்றவனும் அவனுக்கு அதிபனுமில்லை.

(9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/295&oldid=1574720" இலிருந்து மீள்விக்கப்பட்டது