உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

271

தன்னியற்கையினாலே பிரதானத்தினாற் றரப்படும் பல நூலிழைகளைத் தன்னகத்தே பொதிந்துவைக்குஞ் சிலந்தியைப் போன்ற ஏகனான இறைவன் பிரமத்தோடு யாம் ஐக்கிய முறுதலை அருளக் கடவன். (10)

சருவபூதங்களினுங் கூடனாய்ச் சருவவியாபியாய்ச் சருவபூதாந்தரான்மாவாய்ச் சருவகருமங்கட்கு முதல்வனாய்ச் சருவபூதங்களுள்ளுஞ் சாட்சிமாத்திரையா யிருப்போனாய்க் கேவலஞ் சேதனனாய் நிர்க்குணனாயுள்ள தேவன் ஏகனே. (11) தொழிலறுந்து கிடக்கும் பலவற்றுள்ளும் ஏகனாய் வசிப்போன் வித்து ஒன்றனையே பலவாகச் செய்கின்றான். தம்முடைய ஆன்மாக்களுள் வைக்கப்படுவோனாக அவனை அறியவல்ல பெரியோர் நிலையான இன்பத்தைப் பெறு கின்றார்கள், ஏனையோரல்லர்.

(12)

நித்தியர்க்குள் நித்தியனாய்ச் சேதனர்க்குட் சேதனனாய் விரும்பும் பொருள்களை நுகர்தலுறும் பலவற்றுள்ளும் ஏகனாய் அவனிருக்கின்றான். சாங்கியத்தானும் யோகத்தானும் அறியப்படுங் கடவுளின் இந்தக் காரணத்தை அறியவல்லோர் சருவபாசங்களினின்றும் விடுபடுகின்றார்கள்.

(13)

சூரியனும் விளங்குதலில்லை, சந்திரனுந் தாரகைகளும் விளங்குதலில்லை, அந்த மின்னல்களும் விளங்குதலில்லை, அப்படியானால் இந்தநெருப்பு எவ்வாறு தானே விளங்கும். அவன்றானே வெளிப்படுவானாயின் அவனைச் சார்ந்து நின்று ஏனையவெல்லாம் வெளிப்பட்டு விளங்குகின்றன. அவனுடைய விளக்கத்தினால் இவையெல்லாம் விளக்க முறுகின்றன.

(14)

இப்புவனத்தின் மத்தியில் அவன் ஒருவனே அஞ்சன், நீரினுள் தீயுமாய்ப் புகுந்திருக்கின்றான். அவனை அறிகின்றவர் மிருத்துவைச் சயிக்கின்றார்கள். அப்பேற்றினை யடைதற்கு வேறு வழியில்லை.

(15)

அவன்விசுவத்தைச் சிருட்டிக்கின்றான், விசுவத்தை அறிகின்றான் அவன் ஆன்மயோநி, காலகாலன், குணி, சருவவித்தியன், பிரதானத்திற்கும் ஷேத்திரஞ்ஞனுக்கும் பதி, குணங்களுக்கு ஈசன், உலகினைச்சார்ந்து வரும் மோக்கந்திதி பந்தமென்பவற்றிற்குக் காரணன்.

(16)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/296&oldid=1574721" இலிருந்து மீள்விக்கப்பட்டது