உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மறைமலையம் - 8

அவன் அவனைப் போலவே மரணமில்லான், எல்லாவறிவும் எல்லா முதன்மையும் உலகை இரட்சித்தலு முடைய இறைவன் சரீரத்தில் வசிக்கின்றான். இவ்வுலகை என்றும் ஆட்சிசெய்கின்றான்; இவ்வுலகிற்கு வேறு காரணனில்லை.

(17)

ஆதியிலே பிரமனைப்படைத்து அவனுக்கு வேதங்களை வழங்கித் தன்னுடைய ஞானத்தினையும் விளக்கியருளிய முதல் வனிரட்சிப்பை முத்தியடைதல் வேண்டி அணுகிச் செல்லக் கடவேனாக. (18)

நிட்கலனாய் நிட்கிரியனாய்ச் சாந்தனாய்க் குற்றமிலனாய் நிரஞ்சனனாய் இறப்பில்லாமை யடைதற்குக் கடைப்பாலம் போல்வானாய் விறகுண்ணுந் தீக்கொழுந்துபோல்வானாய்

உளன்.

(19)

மானவன் ஆகாயத்தைத் தோல்போற் சுருட்ட வல்லனாங் காறும் சிவனை யறியுமறிவா லன்றித் துக்கசாந்தி யுண்டாக க மாட்டாது. (20)

தன்தபோ வல்லமையானுந் தேவப்பிரசாதத்தானுஞ் சுவேதா சுவதர முனிவர் மிகச்சிறந்த நிலையிலுள்ள அத்தியாச் சிரமிகளுக்கு, எல்லா விருடிகளானும் எல்லாவற்றினு மெல்லாமாய்த் தியானிக்கப்படும் மேலான சுத்த பிரமத்தி னியல்பை வகுத்துரைத்தார்.

(21)

பரம இரகசியமாயுள்ள வேதாந்தமானது, அடக்க மில்லாத புதல்வனுக்காவது சீடனுக்காவது உபதேசிக்கற் பாலதன்று.

(22)

தேவனிடத்துப் பரமபத்தி பண்ணுவோனாய் அங்ஙனம் பண்ணுதலானே குரவனிடத்தும் அவ்வியல் புடையோனா யிருக்கும் மகான்மாவுக்கு ஈண்டுணர்த்தப்பட்ட இரகசியார்த் தங்கள் தாமே விளங்குகின்றன, அவ்விரகசியார்த்தங்கள் தாமே விளங்குகின்றன.

ஆறாம் அத்தியாயம் முடிந்தது.

சுவேதா சுவதரோபநிடத மொழிபெயர்ப்பு முற்றும்.

திருச்சிற்றம்பலம்.

(23)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/297&oldid=1574722" இலிருந்து மீள்விக்கப்பட்டது