உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273

18. சுதேச பாஷாப்பியாச நிவர்த்தி

சன்னைச் சருவகலாசாலைச் சங்கத்தார் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதலிய பாஷைகளை அப்பியசித்தலாலே பயனில்லாமையின், உயர்ந்த வகுப்பி லிருந்து கொண்டு ஆங்கில மொழிப்பயிற்சி செய்யும் மாணாக்கர்களுக்கு அவற்றைப் போதித்தல் வேண்டா வடமொழியினை

வெனவும், அவற்றிற்குப் பிரதியாக

ஆங்காங்குக் கற்பித்தலே போதுமெனவும் ஆரவாரஞ்செய்து போதருகின்றார். (பெண்டிர், ஆடவர், சிறாரென்னும் முத்திறத்தாருள்ளும் வழக்கமுற்று நடைபெறுகின்ற சுதேச பாஷாப்பியாசத்தை ஒழித்துவிட்டு, உலகவழக்கொழிந்திறந்த வடமொழியினை மாத்திரம் அப்பியசித்தல் போதுமெனக் கூறும் அவருரை சிறிதும் நியாயமாகக் காணப்படவில்லை).

ஒருவர் கருத்தினைப் பிறரொருவர்க்குத் தெரிவித்து ஒருமையுற்று வாழ்வதற்கு இன்றியமையாது வேண்டப்படுங் கருவியாயுள்ளது ஒருபாஷையாம், அந்தப் பாஷைதானும் தன்னை வழங்கும் மாந்தருடைய நாகரிக விருத்திக் கேற்பச் சிறிது சிறிதாய் மாறுதலுற்று அபிவிர்த்தியாய் வருதலும், அவர் தம் அநாகரிக விருத்திக் கேற்பச் சிறிது சிறிதாய்த் தேய்ந்து போய் இறுதியில் இறந்தொழிதலும் இயற்கையாகப் பெற்றுவரும். சில நூற்றாண்டுகளுக்கு முன்னே அநாகரிக நிலையிலிருந்த ஆங்கில மக்களுக்குள்ளே ஒரு மூலையில் அருகி வழங்கிய ஆங்கில பாஷையானது அம்மக்கள் பிற்காலத்தே செய்துவரும் பெருமுயற்சியானும் நூலறிவாற் றலானும் பெருக்கமுற்று உலகமியாங்கணும் பயிலப்படுகின்றது. பல்லாயிர வருடங்களுக்கு முன்னே நாகரிக நிலையிலிருந்த ஆரியமக்கள் பின்னர்த் தம் முயற்சியிழந்து நாகரிக விருத்தி குன்றிப்போதலால் அவர் வழங்கிய இலத்தீன், ஆரியம் முதலிய பாஷைகள் சிறிது சிறிதாய்த் தேய்ந்து உலகவழக்கமற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/298&oldid=1574723" இலிருந்து மீள்விக்கப்பட்டது