உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

மறைமலையம் - 8 – 8

ஒழிந்தன. அங்ஙனம் இறந்தொழிந்த பாஷாப்பியாசத்தால் அப்பாஷையினை வழங்கிய ஆரியமக்கட் பண்டை ஆசார வியல்புகளும், சமய நிலைகளும் ஒரு சிறிது விளங்குமேயன்றி, இக்காலத்து வேறு அப்பாஷாப்பியாசத்தாற் பெறப்படும் பயன் பெரிதில்லை.

இனி, உலகவழக் குடை யவான தமிழ் முதலான சொற்களோ பண்டைக்காலந்தொட்டு இன்று காறும் வழக்கு வீழாது நடைபெறுதலால், இப்பாஷாப்பியாசங்கொண்டு பண்டைக் காலத்துத் தென்றமிழ் நாட்டியல்புகளும், சமயநிலை முதலாயினவும் அறியப்படுதலேயன்றி இக்காலத்து ஆங்கில நூலறிவு விருத்திப் பேற்றினை இத்தென்னிந்திய அகனாட் டுள்ளார் இனிதடைந்து வாழுதலும் உண்டாகும். இப்பாஷாப்பி யாசத்தால் ஆங்கிலமக்கள் நூதன நூதனமாய்க் கண்டு வெளியிடும் அரியபெரிய விஷயங்கள், உபந்நியாசங் களானும், நூலியற்றுதலானும், மாணாக்கர்க்குப் போ தித்தலானும் தென்னாட்டகத்துள்ளார் எல்லார்க்கும்

னிதுபுலனாய் அவரியற்கை நல்லறிவினை மிகுதிப்படுத்தும். பிறதேசங்களின் அரியபெரிய நாகரிக வரலாறுகள் இச்சுதேச பாஷாப்பியாசத்தால் நன்குணர்த்தப்படுதலின், அவ்வுணர்ச்சி யால் மக்களெல்லாரும் ஒற்றுமை யடைந்து வாழுங்கடப்பாடும், தம்முடைய பாஷைகளை வளம்படுத்துந் துரைத்தனத்தார் மாட்டு நன்றியறிதலும் செழித்தோங்கும்.

இனி, இந்தமுக்கிய நன்முறையை விடுத்து உலகவழக்கு வீழ்ந்த வடமொழி முதலான பாஷைகளைப் பயிற்சி செய்தலாற் பெறப்படுவன யாவையோ வெனின்; - ஒவ்வொரு சொல்லையும் புதிது புதிதாக அறியவேண்டும் முயற்சியும், அங்ஙனம் வருந்தியறிந்த சொற்களும் அவ்வாறு அறிந்தார்க் கன்றி மற்றையோர்க்கு விளங்காதன வாகையால் நாடோறும் அவற்றைப் பயின்று ஞாபகத்திற் பதிக்கவேண்டும் இடுக்கணும், பதித்தவழியும் அவற்றாற் பிறரைப் பயன்படுத்துமாறின்மையும், சுதேசபாஷாப் பியாசஞ் செய்தார் செய்தார் மாட்டு ஒற்றுமை யின்மையும் பிறவுமேயாம்.

அற்றன்று, வடமொழி முதலான முன்னைக் காலத்து மொழிகளைப்பயிற்சி செய்தலானே அவற்றின்கட் பொதிந்து கிடக்கும் அரியபெரிய விஷயங்கள் புலப்பாடாக அறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/299&oldid=1574725" இலிருந்து மீள்விக்கப்பட்டது