உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

275

உரமேறிக் கொழுமதி யடையுமாகையால், அவை உலகவழக்கு வீழ்ந்தமை கொண்டே அவற்றின் பயிற்சி வாய்ப்புடைத் தன்றென மறுத்தல் பொருந்தா தாமெனின்:- நன்று சொன்னாய், பண்டைக் காலந்தொட்டுவழக்குடைத்தாய் வருந் தமிழ் முதலான பாஷைகளின் கண்ணும் அவ்வாறே அறியப்படுவன வாய்க் கிடக்கும் அரியபெரிய விஷயங்கள் பலவாதலான், அப்பெற்றிப்பட்ட பாஷைகளுள் ஒன்றை மாத்திரம் பயிலல் வேண்டும் ஏனையவற்றை யொழித்தல் வேண்டுமெனக் கூறுதல் நடுவுநிலையுரை யாகாதென்றொழிக அல்லதூஉம், (வட மொழியைக் காட்டினும் எத்தனையோ மடங்குயர்ந்த தமிழ்முதலிய பாஷைகள், அவ்வாரிய மொழியோடு ஒற்றுமை யுறுதற்குமுன் உயர்ந்த உண்மைக் கருத்துக்களும், உலகியல் பிறழாதசெய்யுள் வழக்கும், எளிய முறையாற் சொற்கோப்ப மைந்த செய்யுளுரை நடையும், உய்த்துணர்ந் துலகியலாறு தெரிக்கும் விரிந்தவுணர்ச்சியும், அறிவுநுட்பத்திற் கியைந்த தத்துவ இரகசியார்த்தங்களும், உண்மைச் சரிதமுறைவழுக்கா வரலாறுகளும் உடையனவாய்ப் பெரிதுவிளங்கிப், பின்னைக் காலத்து அவ்வாரிய அவ்வாரியமொழிச் சம்பந்தம் பெறுதலால் பெருமைகளை ஒருங்கிழந்து அவ்வாரிய மொழியின்கட் காணப்படும் பிள்ளைமைக் கருத்துக்களும், உலகியலாறு கடந்துரைக்குஞ் செய்யுள் வழக்கும், அரிதுணரப் படுவனவாய்ச் செயற்கைத்திற மமைந்த செய்யுளுரை நடையும், உய்த்துணர்ச்சியின்றி மேனோக்காய் உலகியலாறு கடந்து செல்லுஞ் சிறுகிய வுணர்ச்சியும், இயற்கையறிவு நுட்பத்தோடி யையாத தத்து வார்த்தங்களும், சரிதவுண்மைத் திறம் பிழைத்த கட்டுக் கதைகளும் இடையிடையே விரவப் பெற்றுப் பொலிவு குன்றுகின்றன.

அவ்வருமை

ஆரியபாஷாப் பியாசம் பெருகாத இத் தென்றமிழ் நாட்டகத்தேயே அவ்வாரிய மொழிவழக்குகள் ஆரிய மக்கள் கூட்டுறவாற் பையநுழைந்து கேடுபயக்கு மாயின், அவ்வாரிய பாஷையைக் கலாசாலைகளில் முறையே கற்பிக்கவும், சுதேசபாஷாப்பியாசத்தை நீக்கவும், நம்கௌரவ துரைத் தனத்தார் கட்டளையிடுதலால் சுதேச பாஷைகட்கும் அவற்றை வழங்கும் நன்மக்கட்கும் நேருங்கேட்டினை நாங்கிளந்து கூறுதல் வேண்டா. இனி, இறந்தொழிந்த அவ்வாரிய பாஷையினைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/300&oldid=1574726" இலிருந்து மீள்விக்கப்பட்டது