உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

மறைமலையம் -8 8

பயிலும் மாணாக்கர்களும் அதன்கண் இடர்ப்பா டுடையராய்ச் சருவகலாசாலையிற் றேர்ச்சி பெறும் பொருட்டுச் சிலகற்றுப் பின் அப்பயிற்சி யினைச் சோரவிடுவர். இதனால், சுதேச பாஷாப் பியாசமும் ஆரியபாஷாப்பியாசமும் அம்மாணாக்கர் கட்கு இல்லையாய்ப் போதலின், நங்கௌரவ துரைத்தனத்தார் இந்து மக்கட்குக் கலைப்புலமை நிரப்புதல் ம நிரப்புதல் வேண்டு மெனக்கருணை மேற் கொண்ட எடுப்புப் பயனின்றி யொழியும்.

இப்பரதகண்ட மாதேயத்தின்கட் கலைப்புலமை நிரம்பினோரை எண்ணிப் பார்க்கும்வழி ஆயிரவருள் ஒருவரைக் காண்டலும் அரிதாம். அங்ஙனம் அரித்தெடுத்துப் பார்ப்பினும் அவர்தாமுங் கலைப்புலமை சிறிதே நிரம்பப் பெற்றாராவர். ஏனைஎல்லாருங் கல்வியறிவு சிறிதும் வாய்ப்பப் பெறாதவராவர். கல்வியறிவில்லாத அம்மாந்த ரெல்லாரும் தமிழ் முதலிய பாஷைகளைச் சுத்தமாய் வழங்கி வாழ்க்கை நடாத்து கின்றார். அங்ஙனம் அவர் மேற்கொண்டொழுகும் தமிழ்வாழ்க்கையின் கண்ணே சிறிதுஞ் சம்பந்தம் பெறாத ஆரியம் ஆங்கிலம் முதலான பாஷாப்பியாசஞ் செய்தோர் அவ்வாழ்க்கை யினையுடைய மக்கள்மாட்டு யாங்ஙனங் கலந்தொழுகுவார்? யாங்ஙனந் தாமறிந்த கலைப்பொருள் நுட்பங்களை அவர்க்கு அறிவுறுப்பார்? அவரை அவர் சீர்திருத்து முபாயம்யாது? இன்னோரன்ன காரியங்களை நன்காராய்ந்தறிய வல்லரான நங்கௌரவ துரைத்தனத்தார் சுதேசபாஷாப் பியாசத்தை நிவர்த்தி செய்ய எண்ணுவது

வியக்கப்படுவதொன்றாம்.

அற்றன்று,

சன்னைச் சருவகலா சாலைகளிற் சுதேசபாஷாப் பியாசம் நிரம்பச் சீர்கேடா யிருத்தலால், அங்ஙனம் அப்பியசிப்பது பயனின்றாமெனின்; அறியாது சொன்னாய், எப்-ஏ வகுப்பில்தவிர மற்றை வகுப்புக்களிற் போதிக்கப்படும் சுதேசபாஷாப் பியாசம் மிகவுந் திருத்தமா யிருத்தலால் அவ்வாறு சொல்லுத லடாது. அல்லதூஉம், சீர்கெட்டிருக்குஞ் சுதேச பாஷாப்பி யாசத்தினைத் திருத்திப் பண்படுத்துதலே முறையாமன்று. அப்பயிற்சியினை அறவே ஒழித்துவிடல் வேண்டுமெனக் கூறுதல் நியாயவுரையாகாது. நாமறிந்த வளவிற் சென்ற நான்கைந்து வருடங்களாக எப்-ஏ வகுப்புக்குப் பாடங்களாக நியமிக்கப்பட்ட நூல்கள் மிகவுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/301&oldid=1574727" இலிருந்து மீள்விக்கப்பட்டது