உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

277

சாமானியமானவை. ஆழ்வார் சரித்திரம், இராமாயண வண்பா, போச சரித்திரம், அரிசந்திரன் சரிதை, சூளாமணி வசனம் முதலிய நூல்கள் சொற்பொருணுட்பங்களும் பயில்வோர்க் கின்பம் பயப்பது மின்றி உரை வளங்குன்றி விழுப்பமுறாதனவாம்; பயில்வோர்க்குத் தமிழின் மாட்டு இகழ்ச்சி விளைத்து அவர் நல்லபிமானத்தைக் கெடுப்பனவாம், தமிழ்மொழியி னுயர்ச்சியினைக் குறுக்குவனவாம். இன்னோ ரன்ன போலிநூல்களைச் சருவகலா சங்கத்தார் எப்-ஏ வகுப்புக்குப் பாடங்களாக நியமித்தலாலேதான் தமிழ் மொழிப்பயிற்சி கழப்படுகின்றது. கலாசாலைகளில் உபாத்திமைத்தொழில் பூண்டிருக்கும் தமிழ்வல்ல பண்டிதர் களும், ஏனைத்தமிழ்ப் புலவோரும்நாம் ஈண்டு வெளியிட்ட அபிப்பிராயமேகொண்டு போதருகின்றார். இப்பெற்றியவான போலிநூல்களைப் பாடமாக நியமித்த லொழிந்து சொற்பொருட்டிற மினிதுடைய அரியநூல்களைச் சருவகலா சங்கத்தார் பாடமாக நியமிப்பார்களாயின் தமிழ்முதலான சுதேசபாஷைகள் மிகச் செழித்தோங்கும்.

அற்றன்று, ஆரியபாஷாப் பியாசத்தானே சுதேச பாஷைகள் தாமே உரங்கொண்டு வளர்ச்சி பெறுமாதலால் அவற்றை வேறாக அப்பியசித்தல் வேண்டாவெனின், சுதேசபாஷையினையும் ஆரியபாஷையினையும் ஒருங்கு கொண்டு பயிற்சி செய்தாலன்றி, ஆரியபாஷையினை மாத்திரம் பயிறலாற் சுதேசபாஷைகள் பெருக்கமுறு மென்பார் கூற்றுப்பொருத்த மின்றிப் போலியாயொழியும். அற்றேல் உயர்ந்த வகுப்புக்களிற்பயிலும் மாணாக்கர் சுதேச மொழி பெயர்ப்பிற்' பரிசோதனை செயப்படுவராகலின், சுதேச பாஷாப்பியாசம் முழுவதூஉம் நீக்கப்படுதலில்லை யாலோ வெனின்; நன்றுகூறினீர்; இலக்கண இலக்கிய நூற்பொருள் போதித்து, அவற்றின்கட் பரிசோதனை நிகழ்த்தித் தேர்ச்சி பெ றுவோர்க்குப் பட்டாபிதானம் வழங்கும் இக்காலத்தே சுதேசபாஷாப்பியாசஞ் சுருங்காநிற்ப, அவ்விலக்கண விலக்கிய நூற்பொருட் போதனையின்றிச் சுதேசமொழிபெயர்ப் பொன்றானே சுதேச பாஷாபிவிர்த்தி யுண்டாமெனக் கூறுவாருரை இழுக்குடைத்தாமென்க. அற்றன்று, சுதேச மொழிபெயர்ப்பிற் சித்தஞ்செய்யப்படும் பரிசோதனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/302&oldid=1574728" இலிருந்து மீள்விக்கப்பட்டது