உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

மறைமலையம் 8 – 8

பத்திரங்கள் அரிதினுணர்தற் பாலனவாயிருக்கு மாதலால், அவற்றின்பெற்றிதேர்ந்து மாணாக்கர் தாமே தஞ்சுதேச பாஷையினைப் பயின்று கொள்வரெனின், அரியபெரிய அச்சுதேச பாஷாப்பியாசத்திற்கு வேண்டுஞ் சாதனங்களை அமைத்தலில்லாது, தமக்குத் தோன்றிய வாறெல்லாஞ் சருவகலாசங்கத்தார் மாணாக்கர்களை அவற்றின்கண் அங்ஙனம் பரிசோதித்து இடர்ப்படுத்தல் நியாயமுமுறையு மாகாது. அல்லதூஉம், அம்முறையாற்சுதேச பாஷையினை விருத்திசெய்தலே கெளரவ துரைத்தனத்தார்க்குக் கருத்தாயின், அம்முறை பற்றியே வடமொழி பெயர்ப்புப் பரிசோதனை பத்திரத்தான் ஆரியபாஷையினையும் அப்பியாசஞ் செயவிட லாமன்றே? ஆரிய பாஷையினை மாத்திரம் இலக்கண லக்கிய நூற்பொருளோடு போதித்தலென்னை? சுதேச பாஷையினை அங்ஙனங்கற்பித்துப் பரிசோதிக்கக் கருத் தொருப்படாதவாறு என்னை? இவற்றையெல்லாம் ஆய்ந்துணரும்வழி நங்கௌரவ துரைத்தனத்தார் சுதேச பாஷாப்பியாசத்திற் கொண்ட கருத்து ஐயுறற் பாலதொன்றா யிருக்கின்றது.

6

இனி, நாமிங்ஙனந் தருக்கித்தலானே ஆரியபாஷாப் பியாசமின்றிச் சுதேசபாஷையினை மாத்திரம் ஆங்கிலத்தொடு கூட்டிக் கற்பித்தல்போதுமென்பது நங்கருத்தாமாறில்லை. ஆரியவாங்கில சுதேசபாஷைகள் மூன்றனையும் ஒருங்கு போதித்தல் வேண்டுமென்பதே நங்கருத்தாவதாம். ஒன்றற் கொன்று உபகாரப்படும் அம்மூன்று பாஷைகளையுஞ் சேர்த்து அப்பியசித்தலானே ஒருமை யுணர்ச்சியும், ஒற்றுமை வாழ்க்கையும், பிறநுட்பப் பொருள்களும் அரும்பிமுதிரும். கௌரவ துரைத்தனத்தார் அம்முறையாற் பல்லாயிர இந்து நன்மக்களை விரைவிற் கல்விபயிற்றி நாகரிகவிருத்தியினை உண்டுபண்ணுவர். அத்துரைத்தனத்தார் அதிகார நீழற் கீழிருந்து வாழுங்குடிமக்களும் அவர்செய்யும் அந்நன்றி மறவாராய் அவர் இவ்விந்திய நாட்டை நீடூழிசெங்கோலோச்சி வாழ்கவென நாத்தழுதழுப்ப வாழ்த்துரைப்பர்.

இவ்வாறன்றிச் சுதேசபாஷாப் பியாசத்தின் அருமை பெருமையும், அவற்றை வழங்கும் நன்மக்களின் நாகரிக நிலையும் அறியமாட்டாராய் உன்னத நிலைகளின் மாத்திரங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/303&oldid=1574729" இலிருந்து மீள்விக்கப்பட்டது