உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

1. வேதாகமோக்த சைவ சித்தாந்த சபை

சொல்லியவற்றை மறந்தொழுகுவர். வேறு சிலர் சைவமாவது சிவமாவது நம்முடைய கைப்பொருளுக்கு நஷ்டமன்றோ நேருகின்றது, சபையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்' என்று சொல்வாராயினர். நாயகரவர்களு தொண்டு செய்து சித்தாந்த சைவ வுணர்ச்சி பெற்றுக் கொண்ட வேறு சிலர் தாந்தாமும் நாயகரவர்களாய்விடல் வேண்டுமென்று பேராசைகொண்டு தாமே யாங்காங்குப் பிரசங்கங்கள் செய்தலும் அப்பிரசங்கங்களிலும் வேறிடங் களிலும் நாயகரவர்களைப் புறம்பழித்துக் குருத்துரோகஞ் செய்வாருமாய் ஒற்றுமையழிந்துபோயினர். இனி நாயகரவர் களுக்குப் பின்பாவது அச்சைவர்கள் தம்முள் ஒற்றமை யுடையராய் வாழ அறியாமல் தமக்குள்ளேயே கலகங்கள் விளைத்துத் தாந்தாமே சைவப்பிரசாரகராதல் வேண்டுமென ஆவேசங் கொண்டு ஆங்காங்குப் பிரசங்கங்கள் செய்தார வாரிக்கின்றனர். இங்ஙனம் ஒழிவார் ஒழியச் சபையின் பலம் குறைந்திருப்பதனால் நாயகரவர்களிடத்தில்

ஆசாரிய விசுவாசம் பாராட்டிச் சைவசமயப்பிரகாசத்தினையே விரும்பி யிருக்கும் சில உத்தம சிவாபிமானிகளோடு கலந்து யோசித்து இச்சபையை மறுபடியும் அபிவிருத்தி செய்தற்குரிய சில ஏற்பாடுகள் செய்திட்டோம். அவை வருமாறு:

1. ஞான சாகரம்' எனப்பெயரி நமது பத்திரிகை 'வேதாகமோக்தசைவ சித்தாந்த சபை' யின் பிரசுரமாகவே கொள்ளப்படும்.

2. இச்சபைக்கென்றே வேறு மெம்பர்களைச் சேகரித்தல் கூடாமையால் இப்பத்திரிகையின் கையொப்ப நண்பர்களெல் லாரும் இச்சபைக்கும் மெம்பர்களாகக் கொள்ளப்படுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/30&oldid=1574446" இலிருந்து மீள்விக்கப்பட்டது