உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

- 8

மறைமலையம் 8

3. இப்பத்திரிகையின் கௌரவாபிமான சீலர்கள்’ இச்சபைக்குக் காரிய நிர்வாக ய சபையா’ ராகவும், பத்ராதிபர்’ ‘காரியதரிசியா' ராகவுங்கொள்ளப்படுவர்.

4. நாகப்பட்டினம் முதலிய இடங்களிலுள்ள சபை எல்லாம் ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் நன்முயற்சியினாலேயே ஏற்படுத்தப்பட்டு நிலவுதலானும், அச்சபையாரெல்லாரும் நாயகரவர்களுக்கு நன்றி செலுத்தக்கடமைப் பட்டிருத்த லானும் அச்சபைகளெல்லாம் இவ் 'வேதாகமோக்த சைவ சித்தாந்தசபை’க்கு அங்கங்களாம் படி அச்சபையார் அனுமதி தருதல் வேண்டும். அவ்வாறு செய்தலால் அச்சபைகளெல்லா வற்றினுடைய சமூகமே 'வேதாகமோக்த சைவ சிந்தாந்த சபை' எனப்பட்டு எல்லாச் சபையாரும் ஒற்றுமைகொண்டு சைவஸ்தாபனஞ் செய்வதாய் மதிக்கப்பட்டு உலகெங்கணும் சைவம்பரவும்.

5. அவ்வச்சபையாரும் பிறரும் தங்கள் தங்களால் யன்றவளவு பொருளுதவியிட்டால் அப்பொருள் கைக் கொண்டு இச்சென்னைமா நகரத்தின்கண் ஓர் அழகிய மாளிகை அமைத்து அதில் சமயாசிரியர் சந்தனாசாரியர் திருவுருவப்படங்களும் ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் திருவுருவப் படமும் எழுந்தருளச்செய்து அதனுடன் இப்பத்திரிகா பிரகடனத் திற்கும் வேறுவேறு சைவநூற் பிரகடனத்திற்கும் உபகரணமாக ஓர் அச்சியந்திரசாலையும் ஸ்தாபிக்கலாம்.

6. இச்சபையின் சார்பாக மாதமொருமுறை தலை நகராகிய இச்சென்னையில் ஒரு மகோபந்நியாஸஞ் செய்யப் படும். அங்ஙனஞ் செய்யப்படும் உபந்நியாஸங்கள் பத்திரிகையில் வெளியிடப்படும்.

இப்

7. வருடாந்தங்களில் எல்லாச்சபைகளும் ஏகோபவித்து எங்காவது தலைநகரங்களில் 'வேதாகமோக்த சைவ சித்தாந்த சபை' என்னும் பொதுப்பெயராலொருங்கு கூட்டப்பட்டு உற்சவங் கொண்டாடப்படும்.

8. இங்ஙனம் ஒழுங்குபடுத்தி நடத்தப்படும் “வேதாக மோக்தசைவ சித்தாந்த சபை’ க்குத் தஞ்சபைகளை அங்கங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/31&oldid=1574447" இலிருந்து மீள்விக்கப்பட்டது