உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

8

மறைமலையம் -8

தென்றும் கூறியுள்ளோம். ஆகையால்,2500 கனவடியுள்ள வின்கண் ஒரு கனவடி கரிவாயுவும், அல்லது 1000 கனவடிகொண்டவாயு வில், இஃதேறக்குறைய அரைக் (த) கனவடிவாயுவுமுளதாகும். அற்றேல், ஒருமனிதன், 10 அடி நீளம், 10 அடி அகலம், 10 அடி உயரங்கொண்ட 1000 கன அடியுள்ள ஓரறையினுள் ஒரு மணிநேர மடைபட்டிருந்த பின்னர், அவ்வறையின் வாயுவைச் சீர்தூக்கிப்பார்க்கின், அதன்கண் 1000 கனவடிக்கு ஒன்றேகால் (கவ) கனவடி கரிவாயுவைப் பிரித்தெடுக்கலாம். பிரித் தெடுக்கின், நாம் ஒவ்வொருவரும் ஒருமணி நேரத்தில் நம் உடம்பினின்றும் 1000 கனவடியில் முக்கால் (தெ) கனவடி கரிவாயுவைப் போக்குகின்றோமென அறிந்து கொள்ளு கிறோம்.

அம்மனிதனை ன 3000 கனவடிகொண்ட ஓரறையில் ஒருமணி நேரம் அடைத்துப் பின்னர் அதன்கண் வாயுவைச் சீர்தூக்கின், அவ்வாயுவில் இயற்கையாயுள்ள கரிவாயு ஒன்றரை (கத) கனவடியும், அவன் புறம்போக்கின் கரிவாயு முக்கால் (தெ) கனவடியுஞ் சேர்ந்து, இரண்டேகால் (உவ) கனவடி கொண்டதாகும். இம்முக்கால் கனவடியையும், மூன்று பங்காகப் பிரிக்கின், ஒரு 1000 கனவடிக்குக்கால் (வ) கனவடி கரிவாயு சேரும். ஆனால் 1000 கனவடி கொண்ட வாயுவில் கால் கனவடி கரிவாயு மிகுந்திருப்பின் யாதொரு கெடுதியும் பயவாதா மென்பது சுகநூல் வல்லார் யாவருக்கு மொப்ப முடிந்திருக் கின்றது.

அற்றேல், ஒருவன் சுவாசிக்க ஒருமணிக்கு 3000 கனவடி கரிவாயு அத்தியாவசியமென்பது மேற்கூறிய நியாயப் பிரமாணத்தான் நன்கு விளங்கும். ஆயினும் நாங்கடினமான தொழில் புரியுங்காலத்து அதிகமாய்க் கரிவாயுவைப் புறம் போக்குவதனால், அதிகமான சுத்தவாயுவை உட்கொள்ள வேண்டும்.

ஆகவே நம்மவர் தேகமுயற்சி செய்யுங் காலத்தும் திறந்த வெளிகளில் அவை செய்யற்பாலர். நம்மவருட்சிலர் அறையின் திறப்புகளெல்லா மடைத்துள்ளிருந்து தேகமுயற்சி சய்கின்றனர். அது அவர்கள் அறியாமைக்குச் சான்றாம்; மேலும், நோயினரும் அதிகமான கரிவாயுவையும், அழுக்கு களையும் தம்மினின்று புறம் போக்குவதால், அவர்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/307&oldid=1574733" இலிருந்து மீள்விக்கப்பட்டது