உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

281

யுஞ் சமையாதிருத்தலானும், முடிவிலடைபட்ட தெருக்கள் சந்துக்களை நீக்குதலானும், காற்றோட்டம் ஒருவாறு தடையின்றி நடந்துவரும். இன்னும் தெருக்களில் புழுதியடங்க நீர் தெளித்தும், இல்லத்தினின்றும் பலவேறு யந்திரசாலை ல களினின்றும் புறப்படும் புகைமுதலியவற்றை உயரமான புகைவாயின் வழியாக மேலே செல்ல விடுத்தும், கழிகால், தூம்பு, அங்கணம், மலவறை முதலியவற்றை நாடோறும் பரீக்ஷைசெய்து சுத்தப்படுத்தியும், குப்பைக்குவியல் மலம் முதலிய அசுத்தங்களைத் தெருக்களினின் றுடனுக்குடனே அப்புறப்படுத்தியும், துர்க்கந்தம் பயக்கத்தக்க வியாபாரத் தாழில்களைப் பட்டினத்துக்கப்பால் நிகழச்செய்தும், இன்னும் இவைபோன்ற பல முறையானும் வாயுவைச்சுத்தி செய்யலாகும்.

இனிப், புறவாயுவின் ஓட்டம் சுத்தம் இவைகளைக் கவனித்த பின்னர், அவ்வாயு நம்மில்லத்தினுள் போதுமான வளவுக்குப் புகுந்து பரவி, அதன் கண்ணுள்ள அசுத்த வாயுவைச் சுத்தி செய்து போதருமியல்பினதாக முயற்சிக்குமாறு ஈண்டுவிரித்துரைக்கப் புகுவாம்.

சுத்தவாயுவைச் சுவாசித்து வெளியே யிருந்துவரும் ஒருவன் ஓர் இல்லத்தினுண்ணுழைந்த வளவில், சிறிதும் நாற்றமுணராவிடின் ஆண்டுள்ளவாயு மிகத் தூயதாயிருக்கு மென்று முன்னரோரிடத்துக் கூறியுள்ளோம். அத்தன்மை யாகவே, உள் வாயுவின் அழுக்கைக் களையவும், வாயுவீசும் வேகத்தை நம்மெய்யிற் பரிசியாமல், புறப்பாலுள்ள சுத்த வாயுவை உட்புகுத்த வேண்டிய தவசியமென் றறிந்துகொள்க.

தனை விளங்கச்சொல்லு முன்னர், நம்மில்லத்தின்கண் ணுள்ளவாயு அசுத்தமடைகிற விகிதமும், அவ்வசுத்தத்தைப் போக்கிச்சுகத்தை யுண்டுபண்ணவும் பேணவுந்தக்க வாயுவின் பரிமாணமும், அப்பரிமாணத்தை யடையக்கூடிய வழியையும், ஈண்டெடுத் தொரு சிறிது விளக்குவாம்.

இல்லத்தின்வாயு அசுத்தமடைகிற விகிதம்:- கரிவாயுவின் ஏற்றத்தாழ்வைக் கொண்டே, வாயுவின் ஏனைய அழுக்குகளை யாம் அளந்தறியக்கூடும். இனி, வாயுமண்டலத்தின் 2500 பங்கில் க்கரிவாயு ஒரு பங்காக எக்காலத்து மிருப்பக் காணலா மென்றும், நாம் புறம்போக்கும் வாயுவிலிது மிகுதியுமுள

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/306&oldid=1574732" இலிருந்து மீள்விக்கப்பட்டது