உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

19. மெய்ந்நல விளக்கம்

பூமிக்குப் பொருள்களைத் தன்னிடமிழுக்குஞ் சக்தி யுளதாகலான், வாயுமண்டலம் சுத்தியடைகின்றதென்பது யாங்ஙனமெனின்:- இருணிறைந்த ஓரறையி னுட்பக்கம் பலகணி அல்ல தொருதொளையின்வழி ஞாயிற்றின் கதிர்வீசினால், அக்கதிரோட்டத்தில் அநேகதூசி, துரும்பு, புழுதி முதலியன ஆடி அசைந்து திரியுமாறுங்காணலாம். பின்னர் அவ்வறையின் சுவர் தளமுதலிய எப்பகுதிகளையும், மேசை நாற்காலி முதலிய பொருள்களையும் நன்றாய்த் துடைத்துச் சுத்திசெய்து, கதவு பலகணி துவார முதலிய எல்லாவற்றையு மடைத்துச்சென்று மற்றைநாட்காலையில் கதவைத் திறந்து பார்ப்போமாயின், தளத்தின் மீதும் மேசை முதலிய பொருள்களின் மீதும் புழுதி படிந்திருக்கின்றவாறு மறியலாம். இத்தன்மையவானது யாதென விசாரிக்கப்புகின் முன்னர்க் கண்ணுற்ற தூசி துரும்பு முதலியவற்றிற் சில பூமியினாலிழுக்கப்பட்டுக் கீழே தாழ்த்தப் பட்டன வாமென்பது இனிது விளங்கும். விளங்கும். இதுகாறும், றைவனியற்கைப் பொருளான வாயுவைச் சுத்திசெய்யு முறையைக் காட்டினோம். இனி நம்மவர் இனி நம்மவர் முயற்சியால் அஃதங்ஙனமாதலை ஆராயப்புகுவாம்.

மக்கள் வசிக்கும் இல்லத்தினுள்ளுலாவும் வாயுவின் சுத்தமும், அசைவும், வெளிவாயுவின் சுத்தத்தையும் ஓட்டத்தை யுஞ்சார்ந்து நிற்கற்பாலனவாம். சார்ந்து நிற்றலான், புறவாயு வீட்டின் சுற்றுப்பக்கங்களிலும் வீடுதோறு மெவ்விடத்தும் தடையின்றி யோடியுலாவி அதன் தூய்மை குன்றாவண்ணம் முயற்சிக்க நம்மாற் கூடுமோவெனின்; பட்டினங்களிற் பல விடங்களிலும் திறந்தவெளிகளை யேற்படுத்துதலானும், வீதிகளை யகலமா யமைப்பதனாலும், குறித்த அளவுக்கு மேலிட்ட உயரமான மாளிகைகளையுஞ் செறிவான வீடுகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/305&oldid=1574731" இலிருந்து மீள்விக்கப்பட்டது