உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

மறைமலையம் லயம் – 8

எடுத்துரைத்தாம். இனி, அப்பரிமாணமுள்ள வாயுவை இல்லின் கண் புகுத்தும் வழியையா ராய்வாம்.

.

வாயுவினியக்கம்:- மணிக்கு இரண்டு மைல் விகிதம் வாயு வீசுமாயின் அவ்வாயு ஈரம் அல்லது வெப்பமுடையதாயினும் அதன்வலிமை யுணரமாட்டுவோ மல்லோம். அவ்வாறு விரைதலுடைய வாயு 10. அடி உயரம், 4 அடி அகலங்கொண்ட ஓர் வாசல்வழி உட்புகுமானால், 150. சுகதேகிகளுக்குப் போதுமான சுத்தவாயுவைத்தரும். அதினும் விரைவாய் உலாவுமாயின் சுவர் செங்கல் கதவுமுதலியவற்றை யூடுருவி உட்புகு மென்றுஞ் சொல்வர். இதுகிடக்க. ஆனால் வாயு தாராளமாய் உண்ணுழைந்து வெளிப்போக எதிர்முகமான கதவுகளையும், பலகணிகளையும் அமைப்பதுடன் அவைகள் வீட்டின் நிகளப்பரப்பைச் சார்ந்திருக்கவேண்டும். என்னை யெனின், உட்புகுந்த வாயுவோடு நன்றாய்க்கலந்து எங்கும் பரவியபின்னர் அசுத்தத்தை யப்புறப்படுத்து மியல்பினதா யிராவிடின், ஓட்டத்தின் விரைவினால் ஒருவழி நுழைந்தவாயு மற்றொரு வழியேசென்று நாங்கோரியபயனைப் பயவாதாம். கூறையினுச்சியில் காற்றோட்டத்தை நோக்கிக் குழாய்களை வளைவாயமைத்தலானும், ஒருவாறு வாயுவினோட்டத்தை

மறித்து உள்நுழைக்கலா மென்பாருமுளர். அவைகள் அநேகமாய் மரக்கலங்களுக்கே பயன்படுதலால் ஈண்டு அவைகளை விரியாது விடுத்தாம்.

இனிவாயு வேகமாய் உடம்பிலுறைத்தால் கெடுதி பயக்குமென்றும் மேலே கூறினோம். இனிவேகமாய்க் காற்றுவீசினும், அக்காற்றுக் குளிர்ச்சியாகவாதல் வெப்பமாக வாதலிருக்கினும் நம்மவர் கதவுபலகணியாவையுமிறுக வடைத்து உள்நித்திரை செய்கின்றார்கள். செய்யின் இல்லத்தின் வாயு அசுத்த மடையுமென்றும், சுத்தவாயு உட்புகலிடமில்லை யென்று மறிந்தும், அறியாதார் போலிருந் தொழுகுவதுமுண்டு. ஆகையால் வாயுவிரைந்து செல்வதைத் தடுக்கவும், ஒரே ஓட்டத்தைப் பலவேறு ஓட்டமாகப் பிரித்து அதன் கதியைக் குறைக்கவும் வேண்டும். ஓரறையின் ஒரு துவாரத்தினுழைந்து செல்லும் சூரியன் கதிர் ஒன்றாயினும், அஃதவ்வறை னெப்பகுதியையும் பிரகாசிக்கச் செய்கின்ற தன்மைபோல அவ்வாயு அறையின் நாலாபக்கமும் பரவிச்செல்லவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/309&oldid=1574735" இலிருந்து மீள்விக்கப்பட்டது