உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

285

சிலமுறைகள் தந்துகாட்டுவாம். கதவுகளிலும், பலகணிகளிலும் லைப்பலகைக ளமைத்தலானும், சிற்சில துவாரங்கள் மிகுந்துள்ள கம்பிவலையானும் வேண்டிய அளவு உயர்த்தவுந் தாழ்த்தவுங்கூடிய ஒன்றன்பின்னொன்றுள்ள இரட்டைப் பலகைகள் பெற்ற பலகணிக ளமைத்தலானும், இன்னும் பலவேறு உத்தியினானும், வாயுவின் வேகத்தைக் குறைத்துப் பலவே றோட்டமாகப் பிரித்து, நாம் நமதில்லத்திலென்றும் சுகமான வாயுவீசிக்கொண்டிருக்கச் செய்யலாம். வாயுவின் இவ்வியக்கமே நம்தேசத்துக்கும் சீதோட்டின நிலைமைக்குந் தகுந்ததாம். ஆயினும் வாயுவினியற்கை ஓட்டங் குன்றி வாயு அசைவற்றிருக்கின் மேலே காட்டிய யாவையும் பயனற்றனவாம்.

L

இனி, வாயு அத்தன்மைத்தான் விடின், இது வேறு முறையா லியங்குமாறு எப்படியெனின் கூறுதும். வெப்பத் தினால் விரிதல்பெற்ற ஒரு கனவடிகொண்ட ஓரிருப்புக் கட்டி பத்துப்பவுண் நிறை கொடுத்தால், அம்மாறுபாடுறாத அவ்வடிகொண்ட பிறிதொருகட்டி 10. பவுண் நிறைக்கதிகங் கொள்ளுமென்பது யாவருமறிவாரன்றோ? எண்ணெயையு நீரையும் ஒருபாத்திரத்திற்கலந்து வார்த்தால் எண்ணெய் மேலும், நீர் கீழுமாகுமாறு மறிவோம். என்னை? நீர் எண்ணெயினுங் கனத்தபொருளாதலால் கீழே தாழ்ந்து செல்லும், நீரினும் இலேசான பொருள்நீரின்மேல் மிதக்கும் பெற்றியுடைத்து. அக்குணங்களே வாயுக்களுக்கும் பொருத்த மாம். அற்றேல், நம்மில்லத்தின்கண் ணுள்ள வாயு, நாம்புறம் போக்கும் வாயுக்களானும், எரியுநெருப்பினானும் மிக்கவெப்ப முறுகின்றது. வெப்பம் பெறுதலால், தன்னிறையிற் குன்றி யிலேசாகி மேலேசெல்லுந் தன்மை யடைகின்றது. அடைய, நிறையிலுயர்ந்த புறவாயுவும், நிறைகுன்றிய அகவாயுவும் சீதோட்டின நிலையான் இம்மாறுபாடுறு கின்றன. மாறுபாடுள்ள இரண்டுஞ் சமமான நிறைபெற ஒன்றோ டொன்று உராஞ்சுகின்றன. ஆகையான் புறவாயு உட்புகுமா றறிந்துகொள்க.

இனிமேலேசென்ற வெப்பவாயு சுவரின்றலையில் அல்லது முகட்டிலமைக்கப்பட்ட துவாரத்தினுட் புகுந்து, வெளிப் போந்து, புறவாயுவோடுகலந்து வியாபித்துத் தன் வெப்பத்தைக் களைந்து அதனுடன் ஒற்றுமை யடைகின்றது. உட்புகுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/310&oldid=1574736" இலிருந்து மீள்விக்கப்பட்டது