உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

– 8

மறைமலையம் 8

வ்

வாயுவும் இவ்வியல்படையற் பாலதெனின், நம்மில்லங்களி லிவ்வாறு வாயுசுற்றி யுலாவுதல் நாமறியாமலே நடந்து வருகின்றது. அற்றாயினும், இவ் வியக்கம் கார்கூதிர்காலங்களில் நம்நாட்டிற்கும் குளிர்ச்சி பொருந்திய வடநாடுகளுக்கும் வாய்ப்புடைத் தாகுமேயன்றி, ளவேனில் முதிர்வேனிற்

காலத்தில் வெப்பம் பொருந்திய தென்னாட்டிற்கு அமையா தென்று முணர்க. எனினும் இவ்வியக்க நடந்தேறச், சுத்தவாயு உட்புகச் சுவரின் அடியிலும், அசுத்தவாயு புறம்போகச் சுவரின் தலையிலும் அல்லது முகட்டிலும் துவாரங்களேனும் சிறுபலகணிகளேனு மறைக்கப்பட்டிருப்ப தவசியம். இத்துவாரங்கள் அறையின் வசிக்குமக்கட்குத் தக்கவாறு, ஒருவர் வசிப்பதற்கு 24. சதுர அங்குலமளவாக அமைக்கப்படுதல் வேண்டும். அவைகள் வாயுவினியக்கத்தின் பகுதியிற் சொன்னவாறு வாயுவின் வேகத்தைக் குறைக்கும் திகளை யனுசரித்து, அசுத்த வாயுவை வெளிவிடுக்குந் துவாரங்கள் வட்டவடிவுளவாயு, மிருதுவாயும் மழையும் வெயிலும் உறையாத வண்ணம் தடைகள் பெற்றுளவாயு மிருத்தல் வேண்டும்.

இன்னும் வரும்.

டி. நல்லதம்பிப் பிள்ளை

வடமொழியிலுள்ள தமிழ்ச்சொற்களுக்குக்

காரணம்

படனம்

வாசித்தல்

பாண் என்பதில் பாட்டு பாடம் படனம் படித்தல் என்பன பிறக்கும். பண்ணொடு ஓதுவது, வாசியென்பது இசைப் பாட்டாகலின் வாசித்தலென்பதற்கும் அதுவே பொருள், வாசம் என்பது மூங்கில், உட்டுளை; அது வாசியென்றாயிற்று. வாசியெனினும் புல்லாங்குழலெனினும் ஒக்கும்; வள் என்பது வட்டம் கூர்மையென்னும் பொருளைத் தரலின் அதினின்றும் வாசமென்னும் சொல் பிறந்தது. மூங்கிற்புதர் வட்டித்துவளரும் தன்மைத்து; வாசம் - மூங்கில், அம்பு, வேகம் இறகு எனு மிம்முறைமையிற் பொருட்பேறாகும். அம்பின் வேகத்துக்கு, அதிற்கட்கும் இறகும் ஓர்காரணம். வாசம் வயமெனத்திரிந்து

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/311&oldid=1574737" இலிருந்து மீள்விக்கப்பட்டது