உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

287

குதிரையையும்; பறவையையும்; வமிசமெனத்திரிந்து மூங்கிலை யும் உணர்த்தும்.

வாத்தியம்

வாசியென்பது இசையாகலின் வாசியம் வாச்சியம் வாத்தியமென்றாயிற்று. இசைமுழக்கமென்பது அதன்பொருள். அவ்வாசியென்பது வசு பசு எனத்திரிந்து எருதையும் ஆவையும் தெரிக்கும் இசையாற் குவிவது.வசுவைக்காப்போன் வசுதேவன் அவன் மகன் வாசுதேவன்.

வீரம்

வில் வீரம்; வில் எய்வதாலுண்டாவது; அது மன வுறுதியின் செயலாகலின் வீரம் வைரம் வசிரம் வச்சிரம் எனத்திரிந்து வைரக்கல்லினையும், வீரம் விரணமெனத்திரிந்து அவ்வில்லின் காரியமாகிய போரினையும் புண்ணையும் குறிக்கும்; விரணம் போர்க்களத்துக்குமாம். விரணகளம் என்பது ரணகள மெனவும், விரணகளத்தின் காரியம் துன்ப மாகலின் ரணம் ருணமெனவும் வடமொழியில் வழங்கும்; ருணமெனினும் கடனெனினும் ஒக்கும். ரணம் ருணம் என்பன வற்றை நிகண்டில் இரணம் இருணம் என எழுதியிருக்கின்றனர். அதிலேயே விரணமென்னும் சொல்லுமுளது.

பல்ல;= கரடி

கரடியின் யின் பல் மிக வெண்ணிறமுடையதாகலின் அது வெண்பல்லம் என்னும் பெயர்த்து. வெண்பல்லம், பல்ல; பல்லுக; பல்லூக; பாலூக; எனத்திரிந்தது. தமிழில் பல்லூகம் வல்லூகம் எனவழங்குகிறது.

கோக: - செந்நாய்.

குரு என்பது செந்நிறமாகலின் அது குருகம் யோகம் எனவாயிற்று. செந்நாய் அப்பொருளைத்தரும். கொக்கு என்பதும் அக்கோகம் என்பதன்திரிபேயாம்.

கோகில; = குயில்

சிவந்த கண்ணையுடையது. கோலம் என்பது சிவப்பு, குயில் என்பதற்கும் அப்பொருளே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/312&oldid=1574738" இலிருந்து மீள்விக்கப்பட்டது