உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

மறைமலையம் 8 – 8 கீர;= கிளி

கீள் என்பதன்திரிபு. கனிமுதலியவற்றைக் கிழித்துத் தின்பது. கீள் = கிழித்தல், கிளியென்பதற்கும் அப்பொருளே.

சுக; = கிளி

அதன் மூக்குச் சிவப்பாகலின் அப்பெயர்த்து.கிஞ்சுகம் சிவப்பு. அதுமுதற் குறையாயிற்று.

கீச;=குரங்கு

கீசகம் என்பதன் சிதைவு, கீசகம் = மூங்கில், நெருப்பு, சிவப்பு, குரங்கு எனுமிம்முறைமையிற்பொருட்பேறாம். குரங்கின்முகம் சிவப்பாகலின் அப்பெயர்த்து. நெருப்பினை யுணர்த்தும் கிச்சு என்பது கீசகமென்பதன்திரிபு, இலைமுதலிய வற்றைக் கிழித்தெறிவது குரங்கின் தன்மையாகலின் கீள்கீசம் கீசகம் எனினும் ஒக்கும். இனிக் கீசகம் சிவப்பாகலின் கீசகன் என்பதற்குக் கோபிப்பவன் எனலும் பொருந்தும். கோபம் என்பதற்கும் அப்பொருளே. கோபம், சிவப்பு, இந்திரகோபம் என்பதனாலும் உணர்க. அது இருசொல் லொருமொழி. இந்திரம், கோபம்; இந்திரம் = சிவப்பு இந்து (கரடி) இந்துளம் (கடப்பமரம்) முதலிய சொற்களான் அப்பொருள் உண்மை பெற்றாம்.

முசலீ = பல்லி.

முசலி முசலீ யன்றாயிற்று. முசலி என்பதற்கு முதற்பொருள் ஓணான்; அதன்தலை சிவப்பாகலின் அப்பெயர்த்து மூல் =சிவப்பு; பல்லி, உடும்பு உடும்பு முதலை, அவ்வோணானினத்தைச் சேர்ந்தமையின் அவையும் அம்முசலிப்பெயர் பெற்றன. முதலை முசலியின் திரிபு. முசலி செந்தாழைக்கும் ஆம். இனி முசலி யென்பது முசலிகை, முசல், முசுக்கை முசுமுசுக்கை எனத்திரியும். 6 முசலின்கண் சிவப்பாகலின் அப்பெயர்த்து. முசுக்கை முசுமுசுக்கை யென்பன ஒரு பொருள்; அதன்பழம் சிவப்பு; முயல் முசலின்திரிபு. முசலியென்பது முகரியென்றாய்த் தாழையைத் தெரிக்கும். முசலம் = உலக்கை, செம்மரத்தாலாயது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/313&oldid=1574739" இலிருந்து மீள்விக்கப்பட்டது