உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

குரங்க: மான்

289

குடாவென்னும் சொல்லிற் பிரிகின்றது, குடாவென்பது வளைவு, வட்டமுதலிய பல பொருளில்வரும். இரவில் மான்கள் கூடித் தமக்குவருங் கேட்டினை நாற்புறத்தும் அறிதற்பொருட்டு ஒவ்வொன்றும் தலையை முன்பக்கமாக வைத்துக்கொண்டு கண்டுயில் செய்வது அவற்றின் இயற்கையாகலின் அப்பெயர்த்து, குரங்கம் விலங்கின் பொதுவுமாம், அது கூலமென்னும் சொல்லிற்பிறந்து மறைப்பதென்னும் பொருளில் வரும்; கூலம் = மறைவு, விலங்கின்வால்; விலங்கினங்களுக்குத் தத்தம்வால் ஈ முதலிய வோட்டுதற்குப் பிரிவில்லாத் துணையாயிருத்தலின் அனுவென்னும் உபசர்க்கம் பெற்று அனுகூலமென்றாயிற்று. சாத்தன் எனக்கு அனுகூலன் அல்லன் எனில் விலங்கின்வால்போல் பிரிவில்லாத்துணை அல்லன் என்பது பொருள்; பிரதிகூலன் என்பது.

தரக்ஷ: = புலி

தரக்குஎன்பதன்திரிபு. தரக்கு=சிவப்பு

பக:=கொக்கு,

கூபகம் பகம்:= நீர்; நீர்ச்சார்பில் வசிப்பது.

சூத்திரம் = யந்திரம்

தாதுவிற்பிறந்தது.

சுள்

சுள் என்னும் எனினும் நுட்பமெனினும் ஒக்கும்; அது நுணுகிநின்று பெரியனவற்றை நடாத்துதலின் அப்பெயர்த்து. கடிகாரத்திலுள்ள முதற் சுழற்சியால் அதனைத்தெளிக. சுழல் என்பதும் அப்பொருளில் வரும்; சுள்-சுழல் இதினின்றே சுழம்பல் என்னும் வினைபிறந்தது. அவனென்னவோ சுழல்வைத்திருக்கின்றான். இராமசந்திர மூர்த்தி தென்கடலில் சுழல் வைத்திருக்கின்றார் என்னும் வழக்கால் சுழல் என்பதற்கு அப்பொரு ளுண்மைகாண்க. அச்சுழலல் எனும் வினையினின்றே உழலல், உழத்தல், உழவு, உழுதல் முதலியனபிறக்கும். உழுதலென்பதற்கு வட்டித்து வருவது என்பது பொருள். எத்தனை சாலாயிற்று எத்தனை வளைப்பாயிற்று எனும் வழக்கால் தெளிக. சால்என்பது வட்டம்; சூத்திரர் என்பது தச்சரைக்குறிக்கும். அதனைச் செய்யவல்லார் அவர் ஆகலின்; தேரினைச் சுளுக்கறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/314&oldid=1574740" இலிருந்து மீள்விக்கப்பட்டது