உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

மறைமலையம் 8 –

செலுத்துவது தேர்ப்பாகர்தம் அரியதோராற்ற லாகலின் அவரைச் சூதர் என்பர்; சுள்சூதர், இவர் நிலத்திலோடும் தேர்ப்பாகரல்லர் ஆகாயத்திலோடுந் தேர்ப்பாகராவர். வானம், வாகனம், விவானம், விமானம் ஆகாயத்திலோடுவது என்பது பொருள்.வாகனமென்னும் சொல்லினின்றே வகித்தல் என்னும் வினைபிறந்தது, இவ்வகித்தலென்னும் வினையில் விவாக முதலிய சொற்கள் பிறக்கும்; அதன்பொருள் குடும்பபாரத்தை வகிக்கத் தொடங்குவது, வகித்தல் சுமத்தல், நூற்பாவை யுணர்த்தும் சூத்திரமென்பதற்கும் இச்சுள் என்பதே தாது, பல சொற்பொருளைச் சுருங்கக்கூறுவது என்பது. சூத்திரம் பஞ்சி னூலையுங்குறிக்கும், நுணுகியுள்ள பஞ்சினா லாயது என்பது. சிற்றறிவுடைமையின் நான்காம் வருணத் தானைச் சூத்திரன் என்பர். சுள் - சிறுமை, சுளுவு - சுளுக்கு, சுள்ளாணி, சுள்ளி, சுண்டுவிரல், சுண்டெலி முதலியவற்றுக்கும் சுள் என்பதே தாது.

6

-

வஸ்திரம் = துணி

=

இது வத்திரமென்பதன்திரிபு, வட்டத்தை யுணர்த்தும் வள் என்பது இதன் தாது, வட்டமாகக் கட்டுதற்குரியது என்பது பொருள். முகத்தையுணர்த்தும் வத்திரமென்னும் சொல்லுக்கும் இத்தாதுவே; வட்டமுடையது என்பது. இன்னும் அவ்வள் என்பதில் வாதம், வாதனம், வானம், வாணம் என்பனபிறக்கும். வாதம் காற்று; சுழன்று சுழன்றுவீசுவது, வாதனம் சீலை, வானம் = ஆகாயம், வட்டமுடையது, வாணம் = சீலை; இது நிர் = து என்னும் உபசர்க்கம்பெற்று நிர்வாணம், நிர்மாணம் எனவும், மாணம் மணமெனக்குறுகி அ என்னும் உபசர்க்கம் பெற்று அம்மணம் எனவும் ஆம். அம்மூன்று சொற்கும் ஆடையில்லா திருத்தல் என்பதே பொருள். நிர்வாண தீட்சை யென்பதற்கு இப்பொருள் கொள்ளற்க. அது சமயம் விசேடமென்னும் அளவினைக் கடந்தது என்னும்பொருட்டு. மாணம் வாணம் நிர்வாண மெனலாயிற்று; மாணமெனினும் அளபெனினும் ஒக்கும். முற்கூறிய வாதனமென்பது வதனம் வசனம் 6 எனத்திரிந்து முகத்தையும் முகத்தின்கணுண்டாகும் வாக்கையும்தெரிக்கும்; உபசர்க்கம் எதிர்மறைப்பொருளது.

பாக்கியம் = செல்வம்

=

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/315&oldid=1574741" இலிருந்து மீள்விக்கப்பட்டது