உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

291

இதன் முதற்சொல் பகு என்பது; இப்பகு என்பதில் பங்கு என்பதும் இப்பங்கு என்பதில் பாக்கி என்பதும் வரும். ஈண்டுப் பாக்கி என்பதற்குப் பங்கு என்பதே பொருள். அஃதாவது ஆறிலொருபாக மென்பதாம். குடிகள் அரசனுக்குப் பாக்கி காடுத்தற்குரியர்; அரசன் குடிகளிடம் பாக்கி பெறுதற் குரியன் எனில், ஆறிலொரு பங்கென்பதே பொருளாகலின் பாக்கியம் என்பது அப்பங்கின் மிகுதியைக் குறிக்கின்றது; அவன் பாக்கியவான் எனில் அப்பங்கின் மிகுதிப் பாட்டைப் பெற்றவனாம் என்க. இச்சொல் பண்டைநாள் வழக்கை விளக்குகின்றது. கின்றது. இக்காலத்தும் அரசர்கள் தம் நிலுவைப் பொருளைப்பாக்கியென்பர். ஏனோரும் என் பாக்கியைச் சலுத்துக என்பர். அது தீதின்றிவந்த பொருளாகலின் சுபாக்கியம் சௌபாக்கியம் எனவும் அதனையுடையானையும் அவன் மனைவியையும் சௌபாக்கியவான் சௌபாக்கியவதி யெனவும் கூறுவர்: "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கறா னன்றாங், கைம்புலத்தாறோம்பறலை" இக்குறள் ஆறிலொரு பங்கென்பதைக் குறிக்கும். பரிமேலழகர் உரையானும் உணர்க.

இனி 8-வது இதழில் விட்ட சொற்களை யெடுத்துக் கூறுதும். வாபீ=நீர்நிலை. காலையுணர்த்தும் தாள் என்னும் சொல்லில் தாவல் என்பதும் தாவல் என்பதன் இறுதியிலுள்ள வல் என்பதில் வாவல் என்பதும் வாவலினின்றும் வாலி யென்பதும் வரும். வாவி பாவி வாபீ என்றாயிற்று. தெலுங்கர் கிணற்றினைப்பாவி என்பர். காலினாலே தாவி இரங்குதற்குரிய நீர்நிலை யென்பது பொருள். நடைவாவி நடைபாவி என்பதனானும் உணர்க.

பேடகம் பேடம் பேழை; கூபகம் கூபம் கூவம் கூவல் எனக்கூறலே தகுதி. மேழை யென்பதற்கு மறைப்பது என்பது பொருள். நீர்நிலையைத் தெரிக்கும் ஆவியென்பது வாவி யென்னும் சொல்லிற் பிறந்தது. தச்சோலம் என்பதைக் கச்சோலம் எனவும் ஆடலன் என்பதை ஆடவன் எனவும் கோல் என்பதைச் சோல் எனவும் திருத்திக்கொள்ளவேண்டும்.

இன்னும் வரும், இங்ஙனம்.

மாகறல் - கார்த்திகேய முதலியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/316&oldid=1574742" இலிருந்து மீள்விக்கப்பட்டது