உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

மறைமலையம் 8 – 8 சகளோபாசனை

என்று இங்ஙனங் காட்டிய அநாகரிக மக்கள் சமய வரலாறுகளானே பெறப்படு முதன்மை ஈதென வாராய்வாம். ஈ

அறிவு விளங்கப் பெறாது விலங்கினத்தோடு ஒப்பவைத் தெண்ணப்படும் அத்துணை அநாகரிக நிலையி லிருந்த மக்கட் சாதியார் மாட்டும் சமய வுணர்ச்சி நிகழ்தல் மேற்கூறியவாற்றா லினிது விளங்கும். அச்சமய வுணர்ச்சி தானும் அவர்க்கு முன்னே நிகழ்ந்த அச்சங்காரணமாகத் தோன்றுவதாயிற்று. அவ்வச்சந்தானும் இடி, மழை, மின்னல் முதலாக உலகியற் புறப்பொருள் விரைந் தியங்கும் இயக்கத்தானும், நோய், சாக்காடு முதலாகத் தம்மாட்டுத் தோன்றும் பீழைகளானும் அவர்க்குத் தோன்றா நிற்கும். அவ்வச்சம் நிகழ்ந்தவழி அவர் அவ்வச்சத்தினீங்கி நலம் பெறுமாறு எங்ஙன மென்று ஆராய்வாராயினார். அங்ஙனம் ஆராய்ந்த விடத்து அந்தரத்தின்கண்ணே ஒரோவொரு காலத்து விரைந்தியங்கும் இடி, மழை, மின்னல் முதலிய வையெல்லாம் மிகவல்லதான மற்றோர் பொருளின் பேரதிகார வழி நின்று இயங்குகின்றன வன்றும், அவற்றை அங்ஙனம் இயக்கும் அப்பொரு அந்தரத்தில் நிலைதிரியா தியங்கும் ஞாயிறு திங்களையன்றி வேறு கட்புலனுக்கு விட யமாகாமையால் அவை அவை தாம் உபாசிக்கப்படும் பரம்பொருளென்றும் அறிவாராயினார். இம்முறைபற்றியே சூரியனை வழிபடுஞ் சௌரமதமும் சந்திரனை வழிபடுஞ் சந்திரமதமும் உற்பத்தியாயின. மழையினுப காரத்தைப் பெரிது வேண்டி நிற்குந் தேயங் களினுள்ளார் அம்மழையினையும் உபாசித்து வந்தார்.

ங்ஙனம் அந்தரத்தின்கண்ணே அச்ச நிகழ்த்தும் அப்பொருள்களை வழிபடுமா றுணர்ந்தபின், இந் நிலவுலகத் தின்கண்ணேயும் அங்ஙனம் அச்சநிகழ்த்தும் பிராணிகளை உபாசிக்கத் தலைப்பட்டார். தம்மினத்தாரிற் சிலர் பாம்புகடித் திறக்கக்கண்டு பாம்பினை வழிபடுவாராயினார். தம்முட் சிலர் தறுகணாளராய்ப் பலரை நலிந்து தலைமை செலுத்திப் பின் இறந்தொழிந்தவழி அவரையுந் தெய்வங்களாகக் கொண்டு பரசினார். தம்முள் வேறுசிலர் நல்லறிவுடையோராய்ப் பலர்க்கு நல்லன பலவுஞ் செய்து இறந்து பட்ட வழி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/317&oldid=1574743" இலிருந்து மீள்விக்கப்பட்டது