உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

293

அந்நல்லோரை வணங்கா தொழியின் யாது நேருமோ வென வெருக்கொண்டு அவரையும் வணங்குவாராயினார். இவ்வாறெல்லாம் அவர் வழிபாடு செய்தற்குக் கருத்தொருப் பட்டு அது செய்யப் புகுதுகையில் தம்மறிவும் உணர்வும் ஒருவழிப்பட்டு நில்லாது சிதர்ந்து பலதலைப்படுதலின் அவர் அதன்கண் இடர்ப்பாடு பெரிதடை வாராயினார். அவ்விடர்ப் பாடு அவரறிவை நுணுக்கி விளங்கச் செய்தலின், அவர் தாம் வழிபடக் கருதும் பொருளினுருவத்தைக் கல், மரம் முதலிய பிறபொருளின்கட் செதுக்கி அவற்றை எதிர்நிறுத்தி அவற்றிற்குத் தம்வழிபாடு கடன் செலுத்துவாராயினார்.

பரிதடைவாராயினார்.

அங்ஙனம் வழிபடும் போதெல்லாம் அவரறிவு முன் போற்சிதர்ந்து போகாமல் ஒருங்கி அவ்வுருவத்தின் கண்ணே சென்று பதிதலால், அவர் அவ்விக்கிரக வாராதனையின் நலப்பாடுணர்ந்து அதனைக் குறிக்கொண்டு போற்றுகின்றார். இங்ஙனம், எத்துணை யிறப்ப இழிந்த சாதியாராயினும் அவர் மாட்டும் விக்கிரக வாராதனை காணப்படுகின்றது. இனிக் கல்வி யறிவான் மிகச் சிறந்த நன்மக்களும், இயற்கை யறிவாற்றன் மிகமுதிர்ச்சி யடைந்து விளங்கும் பெரியோரும் உருவத் திருமேனியிற்கொண்டு முதல்வனை வழிபடுவார்க் கன்றி ஏனையோர்க்கு அம் முதல்வனை வழிபடுமாறு ஒரு சிறிதும் செல்லா தென்னுங் கருத்துடையர். அற்றன்று, கிறித்தவருள் ஒரு சாராரும் மதத்தாரு ம்

முகமதிய

இறைவனை உருவத்திருமேனியிற் கொண்டு வழிபடுதல் பொருந்தாதெனக் கூறுபவாலெனின்; -நன்று கடாயினாய், பண்டைக்காலந் தொட்டு வருஞ் சமயிகளெல்லாந் தம்மியற்கை நல்லறிவால் விக்கிரக வாராதனை செய்து போதரக் காண்டலானும், இக்காலத்து இடையே தோன்றிய ஒரு சில சமயிகளே தஞ் செயற்கை யறிவால் தாம் வேண்டியவாறு பொருளில மொழிந்து விக்கிரக வாராதனை மறுத்தலானும் அதுபற்றி ஈண்டைக் காவதோர் க இழுக்கில்லை யென்றொழிக. அல்லதூஉம், உருவத் திருமேனியிற்கொண்டு வழிபடுதல் பொருந்தாதெனக்கூறும் மற்றவர் தாமும் முதல்வனை யாங்ஙனம் வழிபடமாட்டுவாரென்று நுணுகி நோக்க வல்லார்க்கு அவருரை வஞ்சம்பொதிந்த வழுவுரையாமென்ப தினிதுவிளங்கும். தேவாலயங்களில் அவர் விழிபொத்திக்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/318&oldid=1574744" இலிருந்து மீள்விக்கப்பட்டது