உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297

UTL

20. நாலடியார் நூல் வரலாறு

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு எனக்கடைச்சங்கத்தாரான் முப்பாலாக வகுத்துத் தொகுக்கப் பட்ட விழுமிய இயற்றமிழ் நூல்களுட் பதினெண் கீழ்க் கணக்கின்பாற்பட்ட நாலடியார் நூல்வரலாறு பிற்காலத் தாராற் பிறழவுணரப்பட்டது.சென்னைச்சருவகலா சங்கத்தார் எப் - ஏ முதலிய வகுப்புகளுக்கு நியமிக்குந்தமிழ்ச் செய்யுட் ங்களுக்குத் தமிழியலறிவு வாய்ப்பப்பெறாத புலவோர் சிலர் உரைக்குறிப்புக்களெழுதி வெளியிடுகின்றார். அவர் இயற்றமிழ்ச்செய்யுட் பருப்பொருடானும் உணர மாட்டா தாராய் ஆண்டாண்டுப்பிழைபட வுரை வுரைத்தலை மேற் கொண்டு, தம்முரைக்குறிப்புக்களைப்பயிலும் மாணாக்கர் களுக்குத் திரிபுணர்ச்சியைப்பயந்து அவர்க்கும் பிறர்க்குங்கேடு சூழ்ந்துவருகின்றார். இப்பெற்றியரானலிவர் பண்டைக்காலத்து நல்லிசைப் புலவர் தெண்டமிழ்த்திறம் விளங்கவியற்றிய நாலடியார் முதலான நூனுட்பமுந்திட்பமுமறிந்து உரையெழுத மாட்டுவாரல்லர். வில்லிபுத்தூரார் பாரதமுங் கம்ப ராமா யணமும் நன்னூலும் செய்யுளணியிலக்கணக் குறிப்புக்கள் சிலவும் பயிறன்மாத்திரையானே பண்டைத்தமிழ்ப் பனுவன் மாட்சி தமக்கினிது விளங்குமெனக்கருதித் தருக்கி அகங்களிப் பாரியலறிவுமயக்கவறிவேயாம் வடநூன் மரபின் வழிப்பட்ட வில்லிபுத்தூரார் பாரதமுதலிய நூற்பயிற்சி, செந்தமிழ் நூன்மரபின் வழிபிழையாப் பண்டைத்தமிழ் நூன்மாட்சி யினையுணர்தற்குச்சிறிதும்பயன்படாது. நச்சினார்க்கினியர்,

சிவஞானயோகி கண்முதலான உரையாசிரியர் நுண் பொருளுரைப் பயிற்சியானும், தொல்காப்பியவியல் நூலறி வானும், சங்கத்தமிழ்நூற் பழக்கத்தானுஞ் செந்தமிழ்ப் புலமை செவ்விதினிரம்பப்பெற்று, அதனோடு தம்மியற்கை மதிநுட்ப வாற்றலுமுடையரான நற்றமிழ்ப்புலவோரே நாலடியார்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/322&oldid=1574748" இலிருந்து மீள்விக்கப்பட்டது