உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

மறைமலையம் -8 8

முதலான நூலுண்மையறிந் துரையுரைக்கு முரிமையு டையராவர். ஏனையோரது செயப்புகுதல் கற்றறிவுடையோ ருண்ணகுதற்கேதுவாம் புன்மையாயொழியுமென்க. இது

கிடக்க.

இனி,

நாலடியார் கூறுகின்றார்.

அப்போலியுரைகாரரில்

ஒருசாரார்தாம்

நூல்வரலாறுரைக்கின்றுழிப்பின்வருமாறு

'பண்டைக்காலத்தே கொடியதொரு வற்கடமுண்டா யிற்று, அதனான் நேர்ந்த வறுமை பொறாத சமண் புலவர் எண்ணாயிரவர் பாண்டி நாட்டிற் றமிழ் வளம்படுத்தும் பாண்டியனைக் களைகணாகப் புகுந்தார். புகுத, அவனும் தமிழ்வளர்ப்பானா

அவரையெல்லாமேற்றுக்கொண்டு

யினான். இஃதிவ்வாறிருப்ப, அவர்நாட்டில் நிகழ்ந்தவற்கடமு நீங்குவதாயிற்று. தந்நாடுமலியமழைபெற்றுச் செழித்தமை தேர்ந்த அச்சமண்புலவர் எண்ணாயிரவரும் பாண்டியனைக் கூய்த் “தலைவ, எம்நாடு பண்டுபோற் செழிப்படைந்தது, யாங்கள் எந்நாடு போதற்கு விரும்புகின்றோம், விடைதரல் வேண்டும் எனக்கேட்பப் பாண்டியன் அவரைப்பிரிய மாட்டானாய்ப் புடைபடக்கவன்று அதற்குஒருப்படானா யினான் படவே, அச்சமண்புலவோர் மற்றைநாளிரவிற் பாண்டியனுக்குணர்த் தாதேதத்தம் நாடு நோக்கிச்சென்றனர். செல்லவே, பாண்டியன்வருந்தி அவரிருந்தவிருக்கைகளை ஆய்ந்துபார்ப்ப ஒ வ்வொருபீடத்தின்கீழும் ஒவ்வொரு நறுக்குச்செய்யுள்கிடந்தது. கிடப்ப, அவற்றையெல்லாம் ஒருசேரத்திரட்டி வையையாற்று வெள்ளத்திற்கொண்டு போய்ச் சொரிந்திட்டான். சொரிந்த சாரிந்த அவ்வேடுகளுள் நானூறேடுகள் நீ நீரொழுக்கை எதிரூடறுத்து நான்கடி மேற்சென்றமையால், அந்நானூற்றினையும் அரித்தெடுத்துக் கோத்துஒரு நூலாக்கி நாலடியாரெனப் பெயர்தந்து போற்றினான், என்றிதனையே இன்னுஞ்சொற்பல்க வாளாது விரித்தெழுதினார்.

இனி, ங்ஙனமொருவரலாறு பண்டை நூலாசிரிய ராதல், நச்சினார்க்கினியரை யுள்ளிட்ட உரையாசிரியராதல் உரைப்பக் கண்டிலம். பிற்காலத்துச்சிறந்து விளங்கிய ஆசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/323&oldid=1574749" இலிருந்து மீள்விக்கப்பட்டது