உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

299

சிவஞான யோகிகளும் அங்ஙனமொருவரலாறுண்மை யாண்டுங் குறித்திலர். இஃதிவ்வாறாக, அப்போலியுரை காரரிதனை எங்கிருந்து எடுத்தெழுதினார்? எனின், அற்றன்று, வ்வரலாறு ஒருவர் ஒருவர்க்குரைப்பத் தொன்றுதொட்டு வருகின்றமையின், இதனுண்மைக்குச்சான்றுவேறுதேடுதல் வேண்டாவெனின்;- அற்றேல், அவ்வரலாறுமற்றைஉண்மை வரலாறுகளொடு மாறுபடாதாதல் வேண்டுமாகலானும், மற்றொருசார் போலியுரைகாரர் இவ்வரலாற்றினை வேறொரு வகையான் மொழிந்திடுதலின் ஒருபெற்றிப்பட நிகழ்ந்த ஓருண்மைவரலாறு அங்ஙன மிருதிறம்படநடைபெற லியாண்டு மின்மையானும் அதனைப்பரம்பரையின்வந்த உண்மை வரலாறுகளொடு முரணுமாறு யாங்ஙனமெனிற் கூறுதும். கடைச் சங்கத்து வீற்றிருப்புப்பெற்ற மதுரைக்கூல வாணிகன் சாத்தனார் தாமியற்றிய மணிமேகலைக் காப்பியத்திற் "பன்னீரியாண்டு பாண்டி நன்னாடு, மழைவளங்கரப்ப மன்னுயிர்மடிந்தது” என வற்கடகால நிகழ்ச்சியினைத் தாங் கண்டிருந்தவாறே நிலையிட்டுக் கூறுதலின் அக்காலத்துப் பாண்டிநாட்டிலேயே வறம்மிகுந்த தென்பது இனிதறியப் படும்; இறையனாரகப்பொருளுரைக்குப் பாயிரவுரைகூறிய முசிறி யாசிரியர் நீலகண்டனாரும் இவ்வாறே பாண்டிநாட்டிற் பஞ்சமுண்டாயிற்றென்றுரைத்தார்; திரு விளையாடற்

புராணமுடையாரும் இவ்வாறே ஒன்றவுரைத் தார்.பாண்டிநாடு அக்காலத்துவறங்கூர்ந்த தெனவுரைக்கும் மெய்வரலாறு யாங்ஙனம் பொருந்தும்? இன்னும்,பாண்டி நாட்டில் அங்ஙனம் வற்கடம் நேர்ந்தவழிப்பாண்டியன் தன்மாட்டிருந்த புலவோரை யெல்லாங்கூவி 'வம்மின்! யான் உங்களைப் புறந்தரகில்லேன்; என்றேயம் பெரிதும் வருந்து கின்றது; நீயிர் நுமக்கறிந்த வாறுபுக்கு நாடு நாடாயின ஞான்று என்னையுள்ளிவம்மின்' எனமொழிந்திட அவரெல்லாம் பன் முகமாய்ப்போயினா ரென்பது களவியல் பாயிர வுரையிற் பெறப்படுகின்றது. வ்வுண்மை வரலாற்றொடு திறம்பி அக்காலத்துத்தான் மற்றைநாடுகளிற் பஞ்சத்தான் வருந்திய சமண்புலவோர் பாண்டியனை நிலைக்களனாக அடைந்தா ரெனக்கூறும் பொய்வரலாறு யாங்ஙனம் பொருந்தும்? இன்னும், சமண் புலவர் ஞானசம்பந்தப் பிள்ளையாரொடு கலாய்த்து அவரொடு தாமும் ஏடெழுதி வையையில் விடுப்பப்பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/324&oldid=1574750" இலிருந்து மீள்விக்கப்பட்டது