உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

யாரிட்ட

மறைமலையம் 8 –

ஏடு யாற்றொழுக்கினை எதிர்கீண்டுசென்ற தென்பதும், அவருய்த்த ஏடுகள் நீர்வழியே சென்றொழிந்தன வென்பதும் பிள்ளையார் கட்டளை யிட்டருளிய திருப்பதிகத் திருவாக்குகளானும் பெரியபுராணம் முதலானஉண்மை வரலாறுதெரிக்கும் நூல்களானும் பெறப்படுகின்றன. இம்மெய் வரலாற்றொடு மாறுபட்டு அந்நறுக்குச் செய்யுட்கள் நாலடிகாறும் மேலேறிச்சென்றன வெனக்கூறும் பொய் வரலாறு யாங்ஙனம் பொருந்தும்? இங்ஙனம் ஆண்டாண்டுப் பிரமாணங்களாகப் பெறப்படும் உண்மைவரலாறுகளோடு அப்போலி யுரைகார ருரைக்கும் போலிவரலாறு பெரிது முரணித்தன பொய்ம்மை புலப்படுத்தலின், அது பரம்பரை வழக்கின்வந்த உண்மை வரலாறாதல் யாண்டைய தென்றொழிக.

இனி, வேறொருசாருரைகாரர் இவ்வரலாற்றினை வேறுபடக்கொண்டு வழங்குமாறுங் காட்டுதும்.

ஞான சம்பந்தப்பிள்ளையாரொடு கலாய்த்து அவரோடு இயற்றிய அனல் வழக்கிற் றோல்வியடைந்த சமண் புலவர் பின் புனல்வழக்கி லவரை வென்று கோடல் குறித்து வையையாற்றில் அவரொடு தாமெழுதியிட்ட ஏடுகள் நாலடி மேலேறிச் சென்றமையால் அவரெழுதியிட்ட செய்யுட்கள் நானூறும் நாலடி நானூறென்று வழங்குவவாயின' என்று பிறழக் கூறி விரித்தார்.

இங்ஙன மிவ்விருவகைப் போலியுரைகாரரும் அவ் வரலாற்றினை இருவேறு படக்கொண் டுரைக்கின்றமையின், அவ்வரலாறு உண்மை யாகாதென்பது கடைப்பிடிக்க, அது கிடக்க, பின்னை யுரைகாரர் கூறும் வரலாறுதான் உண்மை யெனத் தேறாமோவெனின்; தேறாம், என்னை? கி.பி முதனூற்றாண்டின் றொடக்கத்திலே கடைச்சங்கத்தாராற் பதினெண்கீழ்க்கணக்கிற் நோக்கப்பட்ட நாலடியார்க்குக் கடைச்சங்க மொடுங்கிய பிற்றை ஞான்று கி.பி ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியிலே யிருந்தாரான ஞானசம்பந்தப் பிள்ளையார் அற்புத அருட்சரித முறைபற்றி வரலாறுரைத்தல் ஒரு சிறிதும் பொருந்தாமையானும், அவ்வரலாறுதானும் ஞானசம்பந்தப்பிள்ளையாரது அற்புத அருட்சரிதவழி நில்லாது வழுவுதலானும் என்பது. இது கிடக்க.

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/325&oldid=1574751" இலிருந்து மீள்விக்கப்பட்டது