உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

301

இனி, நாலடியார் வந்த வரலாறுதான் பெறப்படுதல் வேண்டுமாலோவெனிற் கூறுதும்; கடைச்சங்கத்தார் காலத்துத் தொகுத்து வகைப்படுத்தப்பட்ட நூல்களுள் ஒரு சில அச்சங்கத்துப் புலவர்களாலே இயற்றப்பட்டன; ஒரு சில பிறராலியற்றப்பட்டன; ஒரு சில முன்னோரும் பின்னோரு மியற்றிய செய்யுட்கள் விராய்வந்தன; திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி போல்வன கடைச்சங்கத்துப் புலவராலேயே இயற்றப்பட்டன; திருக்குறள், பழமொழி, நான்மணிக்கடிகைபோல்வன பிறராற் செய்யப்பட்டன; அகநானூறு, புறநானூறு போல்வன முன்னோரும் பின்னோரும் பாடிய செய்யுட்கள் விராய்வந்தன. அவற்றுள் நாலடிநானூறு முன்னோரும் பின்னோரும் மக்களுயிர்க் குறுதிப்பொருள்களான அறம்பொரு ளின்பவீடுபேறுகளை விரித்துரைத்த செட்யுட் டொகுதியாம். அறப்பொருட் பகுதிபற்றி முன்னோரும் பின்னோருமியற்றிய செய்யுட்களைப் புறநானூறெனவும், இன்பப்பகுதிபற்றி அன்னோர்பாடிய வற்றை அகநானூ றெனவும் வகுத்தவாறுபோல, அறம் பொரு ளின்பம் வீடென்னு நான்கு திறனும் விளங்க அன்னோர் மொழிந்த செய்யுட்களை நாலடிநானூறென வகைப்படுத்தினார். வகைப்படுத்துகின்றுழி, அறம் பொரு ளின்பவீடுபேற் றுறுதிப் பயன்களைச் சுருங்கிய குறள் வெண்பா யாப்பான் விழுப்பந் தோன்ற விரித்துக்கூறுந் திருக்குறள்போல இதுவும் அவ்வுறுதிப் பொருட்பயன்களை நாலடிவெண்பா யாப்பான் அங்ஙனங் கூறுதலின் நாலடி நானூறென்னும் பெயர்த் தாயிற்று. அதுவே அப்பொருட் காரணமாயின் திரிகடுகம், நான்மணிக்கடிகை, பழமொழி முதலியனவும் அப்பொருள் களை அங்ஙனமே நாலடிவெண்பா யாப்பான் விளங்கக் கூறுதலின் அவையும் அப்பெயர்க் குரியவாவான் செல்லு மாகலின், அப்பெயரில் விசேட மில்லையாலோ வெனின்;- நன்றுகடாயினாய், மூன்று விடயங்களை யுணர்த்தும் மூன்றுவாக்கியங்கள் உளவாதல் பற்றித் திரிகடுகம் எனவும், நான்குவிடயங்களுணர்த்தும் நான்குவாக்கியங்களுள வாதல் பற்றி நான் மணிக்கடிகை யெனவும், எடுத்துக்கொண்ட பிரமேயத்தை விளக்குதற்குரிய பழமொழி வாக்கியங் களுடைமை பற்றிப் பழமொழி யெனவும் பெயர் மிலைச்சி, அன்னவிசேடங்கள் பிற இதன்கட் காணப் படாமையான் ஒழிபளவைபற்றி அவற்றின் வேறாக நாலடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/326&oldid=1574752" இலிருந்து மீள்விக்கப்பட்டது