உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

மறைமலையம் 8 – 8

யென்னும் பொதுப்பெயரினையே இதற்குரிமையுடைய சிறப்புப் பெயராகச் சூட்டினார்; அவ்வவற்றின்கட் சிறப்பாகக் காணப்படுங் குறிகள்பற்றி அவ்வவற்றிற்குப் பெயரமைக்கப் படுதலின், அவற்றின் வேறாகக் காணப்படுஞ் சிறப்பில் லாமையே இதற்கோர் சிறப்பாகலின் அது பற்றியமைந்தபெயர் விசேடமில்லையாதல் யாண்டை யதென்றொழிக. ஈண்டுக் கூறியவாற்றால், நாலடியாரென்பது அளவினாற் பெயர்பெற்ற இயற்கைக்காரண முடையதாகலின், இக்காரணமெய்ம்மை தேறமாட்டாது தமக்குத் தோன்றியவாறெல்லாம் பொய்க் கதைகள் கட்டியுரைத்துத் தமிழின்மெய்ம்மை வரம்பழிப்பார் சொற்கள் உண்மையெனத் தேறற்பாலனவல்ல வென்பது தெளிந்திடுக.

இவ்வாறே அப்போலியுரைகாரர் சொற்பொருணுட்ப முணரமாட்டாமல் தமக்குத் தோன்றியவாறெல்லாம் வழூஉப்படவெழுதி வெளியிட்ட உரைப்பீறல்களை முழுது மாய்தல் மணற்சோற்றிற் கல்லாய்தல்போற் பயனின்றி யொழியு மாதலின் விசேடமாகவெடுத்து மறுக்கற்பால வற்றையே ஆங்காங்கெடுத்துக்குறித்திடுவாம். இன்றியமையா விடங்களில் உரையெழுதும் மதுகையின்றி வாளா வெறும் பீறல்களை அளந்தளந்தேடுகளை நிரப்பி மாணாக்கர்க்குத் தமிழின் மாட்டு வறுப்பினையும் அவமதிப்பினையும் உண்டு பண்ணும் அவர்திறங் கற்றறிவு கற்றறிவுடையோரால் அருவருக்கற் பால தொன்றாம். இங்ஙனமெல்லாம் யாங்கடிந்தெழுத வொருப் பட்டது. மாணாக்கர்மாட் டுள்ள இரக்கத்தானும், தமிழின் மெய்ம்மை வரம்பழிதல் நோக்கி எழுந்த பரிவானும், நற்றமிழ்ப் பண்டிதர் ஒருங்குகூடி உரைகள் நுட்பந்தோன்ற வெழுதுதற்கு இஃதோர்தூண்டுதலாமென்னுங் கருத்தானுமேயாகலின், யாம் பகைமை பொறாமை முதலான விழிகுணவயத்தா னிஃதெழுதினேமென் றுலகங்கொள்ளா திருக்கக்கடவது.

L

"இனியவரென்சொலினு மின்சொல்லே யின்னார் கனியு மொழியுங் கடுவே”

நீதிநெறி விளக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/327&oldid=1574753" இலிருந்து மீள்விக்கப்பட்டது