உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303

இறையனாரகப் பொருளுரை வரலாறு

நம் ஆப்தர் சவரிராயரவர்கள் நுட்பவாராய்ச்சியின்மேல் எழுந்த ‘தொல்காப்பிய முழுமுதன்மை' என்னும் விடயத்தின் கண் இறையனாரகப்பொருளுரைவரலாறு பற்றி யாமொழிந்த பொருண்மே லாசங்கை நிகழ்த்தி நம் ஆப்தர் இராகவையங் காரவர்கள் எழுதிய அரிய வழக்குரை 7 - ஆம் இதழிற் பிரசுரிக்கப்பட்டது. அவ்வுரையின் றொடக்கத்திலே ஆப்தரவர்கள் நாமெழுதிய ஆராய்ச்சி யுரையினை விதந்து கூறிய நல்லபிப்பிராயத்திற்கு அவர்கள்பா லெழுமையும் மறவாவுரிமை யன்புபாராட்டுங் கடப்பாடுடையோம். இது கிடக்க.

து

னி, இறையனாரகப்பொருள் பாயிரவுரை செய்தார் முசிறியாசிரியர் நீலகண்டனாரே யாமென்னு மெமது கூற்றைப் பல நுட்பவேதுக்களான் ஆசங்கித்து ஆப்தர் - இராகவையங்கா ரவர்களெழுதிய தருக்கவுரை அரும்பொரு ணிறைந்து திகழுகின்றது. அப்பாயிரவுரை யியல்புபற்றி யாங்கூறியனவும், ஆப்தரவர்கள் கூறியனவுஞ் சொன்மாத் திரையின் வேறு பாடுறுவன போற் றோன்றினும், அவற்றைப் புடைபடவொற்றி யளந்துணர வல்லார்க்கு அவை யிரண்டும் பொருண் முடிவான் ஒத்த கருத்தினவென்பது இனிது விளங்கும். என்னை? ஆசிரியர் நக்கீரானாராலுரையிடப்படாத சிலபொருள் அவ்வுரை யினிடையிடையே விராயின வென்பதவர்க்கு மெமக்குமொப்ப முடிந்ததாகலினென்க. அவ்வுரையினிடை யிடையே ஆண் டாண்டு எடுத்துக்காட்டுக் களாகப்பிரயோகஞ் செய்யப்பட்ட கட்டளைக்கலித்துறைப் பாட்டுக்களும், வேறுசில உரை வாக்கியங்களும், பாயிர வுரையும் நீலகண்டனாராற் சேர்க்கப் பட்டனவென்னும் அபிப்பிராயநெடுநாளாக யாமேற்கொண்டு போதருகின்றோம். அவ்வபிப்பிராயத் தினையே ஆப்தரவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/328&oldid=1574754" இலிருந்து மீள்விக்கப்பட்டது