உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

  • மறைமலையம் - 8 8

6

மேலுமேலு நனிவிளக்கி வற்புறுத்து மொழிந்தமையால் அவர்களபிப்பிராய நம்மொடுமாறுபடு மாறில்லையென்பது தெளியப்படும். அற்றாயினும், அவர்கள் ஒரு கோவைப் படுத்து மொழிந்த வழக்கி லொரோவிடங்களிற் கருத்தொருமை உடையமல்லே மாதலின் அவற்றின்மேலுஞ் சிலவாசங்கை நிகழ்த்தி எழுத வெடுத்துக்கொண்டாம்.

இனி, ஆசிரியர் சிவஞானயோகிகள், களவியல்பாயிர வுரையியற்றினார் யாரென்றாராயமுனைந் திடாமையான் ஆண்டும் பிறாண்டுந் தங்கருத்தொடு மாறுபடுவனவாக விளங்கித்தோன்றும் உரைப்பொருள்களெல்லாம் தெய்வப் புலமை நக்கீரனா ரியற்றியவல்லவென்னுந்துணிபு மேற் கொண்டு அவற்றை எடுத்துமறுத்தருளினார். அவர்களங்ஙனங் குறிப்பானறிந்தமைகண்டே பாயிரவுரை நக்கீரனாரியற்றிய

தன்றென்னு மபிப்பிராயஞ் சிவஞானயோகிகட்குமுண்டென் றுரைத்தாமல்லது, அவர்கள் அப்பாயிரவுரையிலுள்ள ஒவ்வோரெழுத்துஞ்சொல்லும் நக்கீரனாருடையவல்லவென் றுணர்ந்தாரென்னுங் கருத்துற்று அங்ஙனங் கூறினோ மல்லோம். நச்சினார்க்கினியரையுள்ளிட்ட முன்னையுரை யாசிரியன்மாரெல்லாம் அப்பாயிரவுரையினை ஆராயமுனைந் திடாமல் நக்கீரனாரியற்றியதென்றே கூறியொழிந்தமையால், ஆசிரியர் சிவஞானயோகிகளுங் கெதானுகெதிகநயம்பற்றி அப்பாயிர வுரையு ளொரோவிடங்களை நக்கீரனார் திருவாக் கெனவுங் கொண்டு மொழிந்திட்டார். அவ்வுரைவரலாற்றை யாமுமா ராயமுனைந்திலமாயின் எமக்கும் அப்பாயிரவுரை யியல்பு விளங்காதொழியுமன்றே? இங்ஙனம் இதனை முனைந்தா ராய்தற்கு அவகாசமின்றி அரியபெரிய கருமங்களை முடித்தற் கண் அறிவொருங்கிக்கிடந்த நச்சினார்க்கினியர், சிவஞான யோகி கண்முதலான ஆசிரியன்மார் அப்பாயிர வுரையிலுள்ள ஒரோவொரு வாக்கியங்களை நக்கீரனார் திருவாக்குக்களாகக் காண்டுரைக்குமாறுபற்றியாம் நுணுகி முனைந்தாராய வெடுத்துக்கொண்ட தருக்கவுரையின்கண் வரக்கடவதோரிழுக் கில்லை. மேலும், பாயிரவுரை நீலகண்டனா ரியற்றியதேயா மென்னுமெமதுமேற்கோளை வலியுறுத்தற்குச் சிவஞானயோகி களுரைத்தவுரை இன்றியமையா வேதுவாகா மையான், அது பற்றி அம்மேற்கோள் துர்ப்பலமுறுமாறில்லை. பாயிரவுரை நக்கீரனாரியற்றியதன்றென்பதற்கு ன்றியமையாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/329&oldid=1574755" இலிருந்து மீள்விக்கப்பட்டது