உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

305

வேண்டப்படு மேதுக்கள் முன்னெழுதியவுரையில் விளங்கக் காட்டினாம். அவ்வேதுக்களுள் ஒன்றுதானும் நம் ஆப்தரவர் களாற்களை யப்படாமையின் அம்மேற்கோள் வாய்ப்புடைத் தாவதொன்றேயாமென்று தெளிக. அற்றன்று, 'மேற்பாயிரத் துளுரைத்தாம்' என்னுஞ்சொற்றொடர் நக்கீரனாருரை யிடையிற் காணக்கிடத்தலான் பாயிரவுரை செய்தாரு மவரேயா மென்பதுபெறப்படுமாம். பிறவெனின்;- நன்று கடாயினாய், ஆசிரியர் - நக்கீரனார் தம்முரையி லாங்காங்கு விழுப்பந்தோன்ற விரித்துரைநிகழ்த்திய பொருட் கூறுபாடுகளுட், பாயிரத்திற்குவேண்டுவன சில பிரித்தெடுத்து முன்னெழுதிய நீலகண்டனார்தாமே நக்கீரனாருரை யிடையினும் 'மேற் பாயிரத்துளுரைத்தாம்' என்பதனை எழுதிச் சேர்த்தாராகலின் அச்சொற்றொடர் பற்றியே அங்ஙன மெமதுமேற்கோளுக்குக் குற்றஞ்சொல்லுதலடாது. மேலும், நூல்செய்தபின்னே பாயிரஞ்செயப்படுவது தொல்லாசிரியர்க் கெல்லாம் ஒப்ப முடிந்தமையின் நூலிடையே 'மேற்பாயிரத் துளுரைத்தாம்' என நக்கீரனார் கூறினாரென்றல் ஒருசிறிதும் பொருந்துமாறில்லை. இதுகிடக்க.

இனி நம் ஆப்தர் இராகவையங்காரவர்கள், இறைய னாரகப்பொருளுக்கு ஆ சிரியர் நக்கீரனார்கண்டவுரை நான்மறையின் மந்திரவுரைபோல எழுத்திடைப்படாமல் வரலாற்று முறையின் வரப்பெறுதலால், அதுமிகுந்துங் குறைந்தும் பிறழ்ந்தும் அவ்வாறு திரிபுற்று வாராநிற்பப் பின் வந்த நீலகண்டனார் அவ்வுரையினை எழுத்திடையிட்டுப் போற்றினாரென்கின்றார்கள்.பண்டைக்காலத்து ஆரியமாந்தர் தாம்வழங்கும்வடசொற்களை எழுத்திடையிட் டெழுதுமாறு அறியாமையின், தம்மந்திரவுரைகளை யெல்லாம் மூளையிற் பதியவைத்து வரலாற்றுமுறையில் வெளியிட்டுவந்தார்கள். அவ்வாறின்றித்தமிழ்முதுமக்கள் பண்டுதொட்டுத் தாம்

வழங்குஞ்சொற்களை எழுத்திடைப்படுத்து வழங்குமாறறிந்த

மையின் அவரங்ஙனமிடர்ப்பட்டு வரலாற்றுமுறையிற் களவிய லுரையை வழங்கவிடுத்தாரெனல் வரலாற்றுமுறை திறம்பு முரையாம். பண்டைக்காலத்தே தமிழெழுத்துக்களுண் டென்பதற்கு ஆசிரியர் - தொல்காப்பியனார் தம்மிலக்கண நூலில் அவற்றிற்கு வடிவுகூறுதலும், களவியல் பாயிரவுரையிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/330&oldid=1574756" இலிருந்து மீள்விக்கப்பட்டது