உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

மறைமலையம் 8 – 8

66

போந்த

இவ்வறுபது சூத்திரத்தையுஞ்செய்து

மூன்று

ான் என்னும்

செப்பிதழகத்தெழுதிப் பீடத்தின்கீழிட்ட வாக்கியமுமே உறுசான்றாம். அற்றேல், 'உரைநடந்து வாரா நின்றமை நோக்கி' எனவும் ‘இனி உரைநடந்தவாறு சொல் லுதும்' எனவும் ‘இங்ஙனம் வருகின்றதுரை' எனவும் அவ்வுரை யிற்காணப்படுஞ்சொற்றொடர்களானே அஃதெழுத் திடைப் படா வரலாற்றுமுறையின் வந்ததென்றல் ஒருதலை யாகப் பெறப்படுமாம். பிறவெனின்;- நன்று சொன்னாய், அச்சொற் றொடர்ப்பொரு ளதுவாயினன்றே அங்ஙனந்துணிபு தோன்றக்

கூறல் பொருத்தமாம்.

பண்டேபனையேடுகளி லெழுத்துப் பொறிக்கு முயற்சி யுண்டென்பதுகாட்டினா மாகலின் அச்சொற் றொடர்க்குப் பொரு ளதுவன்றாம். மற்றுக் களவியலறுபது சூத்திரங்களும் வினையினீங்கி விளங்கிய வறிவனாற் செயப்படுதலானும், அவ்வறுபது சூத்திரப் பொருளும் அவ்விறைவன தாணை யருள் வழிநிற்குந் தெய்வப் புலமை நக்கீரனாரால் வரையறுத் துரைக்கப் படுதலானும், அவ்வுரையின் றெய்வப் பெற்றிமை உருத்திரசருமரென்னு மூமைச்செட்டிப் பிள்ளையா லற்புதமுறையால் விளக்கப் படுதலானும் அது பரிசுத்தம் பெரிதுடையதாய்த் திகழா நின்றது; அம்மாட்சி யுடைமையின் அஃதெல்லார்க்கும் உபதேசிக்கற்பால தன்றாயிற்று; இலக்கணவிலக்கிய சாத்திரவியலறிவு முற்ற நிரம்பி, இயற்கை நல்லறிவும் ஒழுக்கவிழுப்பமு முடைய ராயினார்க்கே உபதேசிக் கற்பாலதாம் அந்தரங்க வுரிமையுற்று நின்றது; அவ்வந்தரங்க வுரிமைவழாமற் பக்குவம் பெரிதுடைய அதிகாரிகளுக்கு அருகி உபதேசிக்கப்பட்டுப் பரம்பரை வழக்காய் வந்தமையின் "மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் தம்மகனார் கீரவிகொற்றனார்க்குரைத்தார்; அவர்தேனூர் கிழார்க் குரைத்தார்; அவர்படியங்கொற்றனார்க் குரைத்தார்” என்று அதனை அங்ஙனந்தெரித்தோதினார். ஆகலின், அச்சொற் றொடர்ப்பொருள் உபதேசமுறையின் வந்தமை உணர்த்துவதே யாமென்க. இவ்வாறே, திரு வெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவநாயனார் தாமியற்றிய சிவஞானபோதம் பன்னிருசூத்திரங் களையும் வார்த்திகப் பொழிப்பொடு தம்மாணாக்கர் அருணந்திதேவர்க் கறிவுறுத் தருளினார்; அவ்வருணந்திதேவர் அச்சிவஞானபோதப் பன்னிருசூத்திரத் தினையும் அவற்றிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/331&oldid=1574757" இலிருந்து மீள்விக்கப்பட்டது