உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

307

விரிந்தவோ ருரைபோற் றாமியற்றிய சிவஞானசித்தியினையும் தம் மாணாக்கர் மறை ஞான சம்பந்தர்க்கறிவுறுத்தருளினார்; அம்மறைஞானசம்பந்தர் அவற்றைத் தம்மாணாக்கர் உமாபதி சிவனார்க் கறிவுறுத் தருளினார்; அவ்வுமாபதி சிவனார் அவற்றைத்தாமியற்றிய சிவப்பிரகாசம் முதலான எட்டு நூல்களோடும் நமச்சிவாய தேசிகர்க்கு அறிவுறுத் தருளினார். ங்ஙனம் அச்சிவஞான போதவுபதேசம் முறை முறையே வாராநின்றது. இவ்வுபதேச முறைபோல் இறையனாரகப் பொருளுரையுபதேச வரலாறுங் கொள்ளற்பாற்று.

இனித்திருவாய்மொழிக்கு உரையெழுதல் வேண்டு மென்னுங் கருத்தானன்றி அதன்மேலுபந்நியாசங்கள் நிகழ்த்துங் குறிப்பான் நம் பிள்ளையென்பவர் செய்த பிரசங்கப் பொருளைக் கேட்டிருந்த வடக்குத்திருவீதிப்பிள்ளை யென்பார் அவற்றின் அருமைபெருமையுணர்ந்து உரைநடைப்படுத் தெழுதிவைப்ப அது பிரசங்க நிகழ்த்தினோர் பெயரால் 'நம்பிள்ளையீடு' என்று வழக்குற்றுவருத லிதுபோற் பரம்பரை வழக்கின் வந்ததெனப்படாமையால் அவ்வுதாரணம் ஈண்டைக் கேலாதெனவிடுக்க. பாண்டியன் ‘இவ்வறுபது சூத்திரங்கட்கும் பொருள்காண்மின்' எனப்புலவரையேவ, அவர்தனித் தனியே யுரை கண்டு உருத்திரசருமர்க்கவற்றை யுரைத்து ஒன்றை மெய்யுரையெனத்தேறிப்பின்னதன் தெய்வப்பெற்றிமைநோக்கி

உபதேசமுறையின் வழங்கவிடுத்தாராகலின் ங்ஙனம் வருகின்றதுரை எனக்கூறினாரென்றுணர்க. இங்ஙனம் நூலுமுரையும் பெரிதும் போற்றி உபதேசிக்கப்பட்டு வந்த மையின், ஆப்தரவர்கள் கூறியவாறு தடை டயிடையே திரிபுற்றுவந்தது களவியலுரையெனுங்கூற்றுப் பொருத்தமாகக் காணப்படவில்லை. அப்பரம்பரையி னிறுதியில் வந்தோரான முசிறியாசிரியர் - நீலகண்டனாரே அதற்குப்பாயிரவுரையுந், துறைப்பாட்டுக்களும், ஆண்டாண்டியைபுவிளக்குஞ் சில வுரைப்பொருள்களுஞ்சேர்த்து முன்போலுபதேச முறையின் வழங்கவிடாமல் யாரும்பயின்று பெருகவைத்தார். ஆதலின், தெய்வப்புலமை நக்கீரனாரியற்றியவுரை பலவாறுசிதைந்து போயிற்றென்றல் பெரியதோ ரிழுக்காமென்று துணிகின்றோம்.

என்றிதனாற் பாயிரவுரையும் பிறசிலவு மெழுதிக் களவிலுரையொடு சேர்த்து அதனை வழங்கப்படுத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/332&oldid=1574758" இலிருந்து மீள்விக்கப்பட்டது