உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

2. சோமசுந்தர விஜயம்

சுத்தாத்துவித வைதிகசைவ சிந்தாந்தத்துறைகளை அறியமாட்டாராகிய வேறு சமயிகள் அச்சித்தாந்த சைவத்தின் மேல் நியாயவிரோதமாக வெளியிட்ட துரூகவாதங்களை உபந்நியாசங்களானும் நூலுரைகளானும் மறுத்து ஒழித்துச் சிந்தாந்த சைவப்பொருண் மெய்ம்மை யாரும் எளிதில் அறிந்து உறுதி கூறுமாறு அரிய சைவம்பிரசாரகம் செய்து போந்து சிவசாயுச்சியமெய்திய “வைதிகசைவசித்தாந்த சண்டமாருதம்" ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரநாயகரவர்கள் சரிதம் மிகவும் அருமை பெருமையுடையது. ஆதலால் அதனை எழுதி முடிப்பிக்க வேண்டுமென்னும் அவாபெரிதுடையராகின்றார் பலர். அதனை அவ்வாறே முடிப்பதற்கு நமது பத்திரிகை பெருஞ் சாதனமாயிருத்தலால் இதனைப் பலப்படுத்திக்கொண்டு நாயகரவர்கள் சரிதத்தைச் சிறிதுசிறிதாக எழுதி இதன் கண்வெளியிடும் நோக்கமுடையோம். நாயகரவர்கள் தமது இளம்பருவமுதற்கொண்டு இதுகாறும் பிரிசுரித்த பத்திரிகை கள் புத்தகங்களையும் சரிதத்திற்குவேண்டும் பொருட் குறிப்பு முதலிய பிறகருவிகளையும் ஒருங்குதொகுத்து வருகின்றோம். நாயகரவர்களை நேரிற்கண்டு பழகியும் அவர்கள் ஆங்காங்குப் புறச்சமய நீராகரணஞ்செய்து சைவசித்தாந்தம் நிறுத்திய வரலாறு நன்குணர்ந்தும் இருக்கும் நண்பர்கள் தாம்தாம் அறிந்த வற்றை எழுதி எனக்கு உபகரிப்பார்களாயின் அவர் செய்யும் அந்நன்றியைப் பெரிதாக மதித்து இன்ன இன்ன விஷயம் இவரிவரால் உபகரிக்கப்பட்டது என்பதுடன் ன் ஆங்காங்குக் குறிப்பிடுவோம். மறுபத்திரிகையில் எம்மிடத் திருக்கும் நாயகரவர்கள் புத்தகங்கள் பத்திரிகைகண் முதலிய வற்றின் பெயரட்டவணை வெளிவரும். அதிற் காணப்படாத வேறுபத்திரிகைகள் புத்தகங்கண் முதலியவற்றை வைத்திருக்கும் நண்பர்கள் அவற்றை எமக்குத் தருவாராயின், சரிதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/33&oldid=1574449" இலிருந்து மீள்விக்கப்பட்டது