உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

9

முடிந்தவுடன் திரும்பவும் அவற்றை அவர்கட்குச் சேர்ப்பித்து வந்தனஞ்செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

ஆகாயம்

சகளோபாசனை

அசே தனவுருவமாகக் காணப்படும் இத்தூலவுலகம் போற் காணப்படுவதுமன்றாய், அசேதன வுருபொருள் களாகிய வாயு போலுணர்ந் துரைக்கப்படுவது மன்றாய்ச், சேதனவுருவ வான்மதத்துவம்போ லறிந்தனு பவிக்கப் படுவதுமன்றாய்க், காண்பதற்கெல்லாம் அப்பா லாய்க் கேட்பதற்கெல்லாம் அதீதமாய், உரையளவுசென்று முடிவிடங் கடந்ததாய் மனவுணர்வுசென்று பற்றுதற்கு அப்புறமாய், அறிவினுளறிவாய் ஆன்மாவினுள் அந்தரான்மா வாய்க், சருவவுலகங்களுஞ் சருவவண்டங் களுஞ்சருவ வான் மாக்களுந் தனது சிதாகாச வியாபகத்தின் கண்ணே மடங்கி யடங்கிக் கிடப்ப அவற்றின் மேல் விரிந்து சென்று முடிவிட மறியப்படாத வியாபகமுடையதாய், ஞான மங்கள சொரூப முடையதாய்ச் சருவசத்தியுடையதாய் ஆனந்த நிரம்பித் ததும்புந் திப்பியச் சரமாய்ப் பரமகருணாநிதியாய் விளங்கும் முழுமுதற் கடவுளைச் சிறுகிய அறிவுஞ் சிறுகிய தொழிலும் சிறுகியறிந்த தனையும் மறந்து மறந்தறிதலும் மயங்கியறிதலு முடைய கிஞ்சிஞ்சராகிய ஆன்மாக்கள் உணர்ந்து வழிபடுதல் கூடாமையால், அருட்பெருங்கடலாகிய அவ்விறைவன் தன்னை யவ்வான்மாக்களுணர்ந்து உபாசித்து உய்யும் பொருட்டு ஓரோர் காலங்களி லோரோரிடங்களில் ஓரோரன் பர்க்குக் கன்றை நினைத்து வரும் புனிற்றாப் போலவும் விறகின்கட்பிறந்த தீப்போலவும் மோரின் கட் டிரண்ட வெண்ணெய் போலவும் வித்தின்கட் பிழிந்தெடுத்த எண்ணெய் போலவும் வெளிப் பட்டு அவர்க்கு அனுக் கிரகஞ்செய்த அருட்கருணைத் திருக்கோலங்களை மெய் யன்புடையராகி மனவொருமைப் பாடு கொண்டு தியானஞ் செய்து நாவுரை குழறக் கண்ணீருங் கம்பலையுந் தங்குறிப் பின்றியே நிகழவுபாசித்து விழிபட்டுச் சீவபோத நிவர்த்திச் சிவபோதப் பிராப்தி பெறுஞ்சன்மார்க்க முறைதான் சகளோ பாசனையாம். இங்ஙனம், விறகின்கண் மறைந்து கிடந்த தீ அவ்விறகினை ஒன்றோடொன்று தேய்த்துக் கடைந்த வழி அதிற்றோன்றி நின்றவாறு போலவும் பாலின் கண் மறைந்து அளாவி நிறைந்த நெய் அதனைக் காய்ச்சிக்

தீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/34&oldid=1574450" இலிருந்து மீள்விக்கப்பட்டது