உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

மறைமலையம் -8 8

கடைந்தவழி யதன்கண் வெளிப்பட்டு நின்றவாறு போலவும் யாண்டும் பரந்து வியாபிக்கும் ஈசுரன், ஆன்மாவைக் கீழரணியாகக் கொண்டு பிரணவவுணர்ச்சியை மேலரணி யாகக் கொண்டு அன்பென்னுஞ் கயிறு கட்டியிழுத்துக் கடையவே வெளிப் பட்டுத்தோன்றிநின் றனுக்கிரகஞ் செய்வா னென்பது பற்றியே, “விறகிற்றீயினன் பாலிற்படுநெய்போன், மறையநின்றுளன் மாமணிச்சோதியான், உறவுகோனட்டு ணர்வு கயிற்றினான், முறுகவாங்கிக்கடைய முன்னிற்குமே என்னுந் தேவாரத் திருவாக்கும், “இரந்திரந்துருகவென் னத்துள்ளேயெழுகின்ற சோதியேயிமையோர், சிரந்தனிற் பொலியுங் கமலச் சேவடியாய் திருப்பெருந்துறையுறை சிவனே, நிரந்தவாகாய நீர் நிலந்த காலாயவையல்லையா யாங்கே, கரந்ததோ ருருவே தளித்தன்னனுன்னைக்

66

""

கண்ணுறக்கண்டு கொண் டின்றே எனவும் 6 'சோதி யாய்த்தோன்றுமுருவமே யருவா மொருவனே சொல்லுதற் கரிய, வாதியே" எனவும் போந்த திருவாசகத் திருவாக்கும், “நிறுத்திடு நினைந்த மேனி நின் மலனருளினாலே" என்னுஞ் சிவஞான சித்தித்திருவாக்கும்,

66

என்னுங்கைவல்யோபநிடதத் திருவாக்கும்,

66

என்னுஞ் சுவேதாசுவதரோபநிடதத் திருவாக்கும் எழுந்தன.

இங்ஙனம்

காணவுங்கருதவும் வாராத முழுமுதற் பெருங்கடவுளைக் காணவுங்கருதவும் எளிதாகிய உருவத் திருமேனியிற்கொண்டு வழிபடுஞ் சன்மார்க்கச் சகளோ பாசனையியல்பு அறியமாட்டாத வேறு சமயத்தார்சிலர், இந்துக்கள் கேவலமாகிய விக்கிரகாராதனை செய்து ஈசுரனு டைய பெருங்கோபத்திற்கு ஆளாகின்றனர் என்று இழிவாகச் சொல்லா நிற்பர். ரோம், கிரீசு, எகிப்து முதலிய தேசங்களி லுள்ளவர்கள் செய்யும் விக்கிரகாராதனை போல்வதன்றிப், பரதகண்டவாசிகளாகிய ஆரியர்' செய்து போதரும் சகளோ பாசனை ஆழ்ந்த கருத்துடையதாய் முதல்வன் ஓரோர் அன்பர் பொருட்டு ஓரோர் காலங்களில் தரித்துக்கொண்டு வந்த அருட்கருணைத் திருவுருவங்களை மெய்யன்புடையார் மெய்ம் மையான் வழிபடும் மேம்பாடுடைய தாம். பிறதேசங்களிலுள்ள பிறமக்கள் இறைவன் அங்ஙனம் திருமேனிகொண்டு அனுக் கிரகஞ்செய்யுந் திருக்கோலங்களை ஒரு காலத்துங் கண்டறியா மையான் அவர் தாந்தாம் அறிந்தவாறே ஒவ்வோர்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/35&oldid=1574451" இலிருந்து மீள்விக்கப்பட்டது