உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

11

பூனை

சித்திரப்பிரதிமைகளை அமைத்துக் கொண்டும் பாம்பு, சுண்டெலி முதலிய பிராணிகளின் வடிவங்களைத் தாபித்துக்கொண்டும் வழிபட்டு அந்த அசேதன வுருவப் பொருள்களின் கண் அன்புடையராய் ஈசுரனையறிந்து வழிபடுதற்குரிய புண்ணிய மிலராய் வாழுவாராயினர். அப்பிறதேசங்களினும் ஒவ்வோர் காலங்களில் அபரஞான சித்தி கைவந்தவர்களாகிய சில தீர்க்கதரிசிமார் தோன்றி ஆங்காங்குள்ள மக்கள் உய்யும் பொருட்டாகச் சன்மார்க்க முறைகளையும் அபரஞான மார்க்கங்களையும் உபந்நியாஸித்து வந்தார்களென்பதை அவரவர் தேசசரிதங்களானும் சமய சாத்திரங்களானும் அறிந்துள்ளோமாயினும், அத்தீர்க்க தரிசிமாரெல்லாம், இறைவனுடைய திருக்கோலங்களை நேரே கண்டு வழிபடுதற்குரிய பெரும்புண்ணியமும் பரஞான முதிர்ச்சியும் உடையராகாமையால், அவர் தமக்கு அவ் றைவன் மேகத்தில் மறைந்து நின்றனுக்கிரகஞ் செய்தா னென்றும் வனாந்தரங்களிலும் மலைக்குகைளிலுந் தாம் சஞ்சரித்துக்கொண்டிருந்த காலங்களிலிறைவன் தம்மோடு உரையாடிய ஞான சப்தங்கேட்டாரென்றும் அவர் சமய சாத்திரங்களிற் சொல்லப்பட்டதன்றி, அவ்விறைவனேயுருவங் கொண்டு அவர் கண்ணெதிரே தோன்றி யனுக்கிரகஞ் செய்தானென்றும் அவ்வாறு அனுக்கிரகஞ்செய்த முதல்வன் திருவடையாளங்களிவை என்றுங்குறிப்பிடப்படாமையான் அவரெல்லாம் ஈசுரனை அருட்கருணைக்கோலங்களான் வழிபடும் முறைமையறியாராயினர். அங்ஙனம் அறிய மாட்டாத அபரஞானத்தீர்க்கதரிசிமார் கூறிய உபதேச மொழிகளைக் கடைப்பிடித்தொழுகிய மக்கள் அவர் கூறிய சன்மார்க்க போதங்களை மனம் பொருந்த அமைத்து அவற்றின்வழி நடந்து, ஈசுரனைச் சகளமார்க்கத்தானறிந்து உபாசிக்கும் முறைமை தமக்கு விளங்காமையால் தமக்கு விளங்கிய வாறெல்லாம் வேறு பிறவுருவங்களை அவ்விறைவன் ஞானவுருவங்களாகப் பிறழக் கொண்டு அவை தம்மையே வழிபடுகின்றனர். இனிப் பரத கண்டவாசிகளாகிய நன்மக்களோ ஈசுரன் ஒவ்வோர் அன்பர் பொருட்டு ஒவ்வோர் காலங்களிற் கொண்ட சகள அருட் கோலங்களாகிய சதாசிவன், மகேசுரன், அர்த்தநாரீசுரன், காளி, துர்க்கை, உமை, விநாயகர், சுப்பிரமணியன், வைரவன் முதலிய வற்றையே உண்மையான்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/36&oldid=1574452" இலிருந்து மீள்விக்கப்பட்டது