உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

மறைமலையம் -8 8

வழிப்பட்டு நூல் செய்த நல்லிசைப் புலவரானும், அந் நல்லிசைப்புலவர் நூல்கட்கு நல்லுரை கண்டுகூறிய நச்சினார்க் கினியர் முதலான உரையாசிரியரானுங் கொள்ளப்படாமை யால், பிற்காலத்தார் கூறினும் அஃது எம்மனோராற்றழுவப் படுவதன்றென நிறுத்திய எமது மேற்கோளை ஆசங்கித்து ஆப்தர் - சண்முகம்பிள்ளையவர்கள் உரைத்த நுணுக்கவுரை யின் கட் கருத்தொருப்படுகின்றிலோமாதலால் அதனை நிரலே பாய்ந்து பரிகரித்து எமது உண்மைக்கருத்து நிலையிடுவாம்.

ஆசிரியர் அகத்தியனார் ஆனந்தவோத்துள் ஆனந்தக் குற்றத்தினியல்பைவிரித்தோதினாரெனக் கொண்டு நண்பரவர் கள் சில சூத்திரங்கள் எழுதினார்கள். அகத்தியங் கடைச்சங்க மொடுங்கிய பிற்றை ஞான்றே இறந்து பட்டதென்பது முன்னூலாசிரியர் பின்னூலாசிரியர் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின், அகத்தியனார்கூறிய வெனக்கொண்டுகாட்டும் அச்சூத்திரங்கள் வந்தவரலாறு யாது? எனின், அற்றன்று, தொல்லாசிரியர் உரைகளி லாங்காங்கு இச்சூத்திரங்கள் காணக்கிடத்தலால் அவை அகத்தியனாரியற்றியவென்று கொள்ள வமையுமெனின்;-நன்று சொன்னாய், தொல்லை உரையாசிரியராவார் தெய்வப்புலமை நக்கீரனார், இளம் பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க் கினியர், கல்லாடர், பரிமேலழகியார், அடியார்க்கு நல்லார் சிவஞான யோகிகள் முதலியோரன்றே? இவ்வாசிரியன்மா ருரைகளில் யாமாய்ந்த வளவில் அச்சூத்திரங்கள் பிரயோகிக்கப்படுவ தறிந்திலேம். அல்லதவை காணப்படு முரைப்பகுதியினை நண்பரவர்களெமக்கெடுத்துக்காட்டி அறிவுகொளுத்து வார்களாயின் அதன்மேல் நிகழும் நம்மாராய்ச்சியினையுங் குறித்திடுவாம். ஆண்டெழுதிய வழக்குரையில் அச்சூத்திரங்கள் பிரயோகிக்கப்பட்ட வுரைப் பிரமாணங் காட்டாமல் நண்பரவர்கள் நெகிழ்ந்து போதலின், அச்சூத்திரங்களை யாரோ சிலர் கட்டி அகத்தியனார் பெயரால் நடாத்தினா ரென்பது காட்டுவாம். ஆசிரியர் - அகத்தியனார் ஆனந்த வோத்துள் அங்ஙனஞ் சூத்திரங்களியற்றியிட்ட துண்மை யாயின், தொன்னூற் பரப்பெல்லாம் ஒருங்குணர்ந் துரை யெழுதுவாரான ஆசிரியர் - நச்சினார்க்கினியர் மலைபடு கட ாத்துரையில் “பின்னுள்ளோர் ஆனந்தக்குற்ற மென்பதோர் குற்றமென்று

நூல்

செய்ததன்றி, அகத்தியனாருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/335&oldid=1574761" இலிருந்து மீள்விக்கப்பட்டது