உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

மறைமலையம் -8 8

வைத்தாராகலி னதனையறிந்து ஆசிரியர் - சிவஞான யோகிகள் மறுத்திட்டாரல்லது, அக்குற்றங் கோடல் தமக்கு முடன் பாடென்ப ததனாலறியவைத்தா ரல்லரென்க.

எந்நூலிலுள்ளன?

இனி, நண்பரவர்கள் மாமூலனா ரியற்றியவெனக் கூறிய சூத்திரங்கள் அந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு முதலியவற்றிற் சேர்ந்ததொன்றா? அல்லது, வேறு தனிநூலாய் ஆன்றோராற் பிரமாணமாகக் கொள்ளப்படுவது தானா? அஃதிப்போது வழக்கமுறுகின்றதா? வழக்கமின்றி யொழிந்த தாயின் அச்சூத்திரங்களைத் தொன்னூலுரை யாசிரியர் யாரேனுமெடுத்துக்காட்டினாரா? காட்டினா ராயின் எவ்விடத்தே? என்று எமக்குப் பலதலையான் ஆராய்ச்சி நிகழ்தலின், நண்பரவர்கள் அன்பு கூர்ந்து அவற்றை இனிது விளக்குவார் களாக வென்னும் வேண்டுகோ ளுடையோம்.

இன்னும், பொய்கையார் முதலான பண்டையாசிரியரும் பாட்டியல் செய்தார்களென்பது பன்னிருபாட்டியலால் தோன்றுகின்றது என்கின்றார்கள். அப்படியாயின், அவர் செய்த பாட்டியல்யாது? வேறு நூலுரையாசிரியர் யாரேனு மதனை எடுத்துக் காட்டினாரா? பன்னிருபாட்டியலும், வச்சணந்தி மாலையும் இவ்வழக்கினை முடிவுகாண்டற்கேற்ற பிரமாண நூல்களாகமாட்டா. இவற்றின் சொற்பொருள்களில்

ஐயம் வந்துழியெல்லாம், எல்லார்க்கும் பிரமாணமா

யொப்பமுடிந்த தொல்காப்பிய முதலான பண்டைநூற் பிரமாணம்பற்றியும், களவியலுரை முதலான உரைப் பிரமாணம் பற்றியுமே துணிதல் வேண்டும். இத்தருக்கமுறை வழாமல் நண்பரவர்கள் தாமெடுத்துக்கொண்ட பொருளைத்

தாமே பலவகையா னாசங்கித்துப் பிரமாணங்காட்டி

விளக்கியிருந்தால் நாம் மேற்குறிப்பிட்டவாறு பலவாறு வினாக்கள் நிகழ்த்தவேண்டிய தின்றாம். இது கிடக்க.

இனி, மங்கலச்சொல் தனித்தும் வரலாம். அடையடுத்தும் வரலாம், முதற்சீரேயன்றி ஒரு செய்யுளினிடையினுங் கடையினு முள்ள சீரினும் வரலாம். எடுத்துக் குறிக்கப்பட்ட மங்கலச் சொற்களே யன்றிப் 'பிற' என்பதனால் வேறு பலவும் வரலாம். பரியாயச்சொற்களும் வரலாம். காப்புச்செய்யுளினும் வரலாம், காப்புச்செய்யு ளொழிந்து நூற்செய்யுளினும் வரலாம் என்று நியதியின்றிக் கூறினார்கள். இப்படியும் ஒருவிதியுண்டா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/337&oldid=1574763" இலிருந்து மீள்விக்கப்பட்டது