உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

ஞானசாகரம்

313

ங்ஙனம் விதிகூறும் ஒரு நூலை லக்கணமென்றுங் கூறலாமா? இவ்வாறுரைத்தால் எந்த நூலுக்குத்தான் மங்கலங் கூறலாகாது? எந்தச் சொல்தான் மங்கலமாகமாட்டாது? மிக அமங்கலமாய் நடக்கும் நூலுக்கும் மங்கலங் கூறலாமே. அவ்வியாத்தி, அதிவியாத்தி, அசம்பவதோடங்கட்கிடனாய்க் கிடக்கும் இவ்விதியினையும், இவ்வாறுவிதிக்கும் நூலினையுங் கற்றறிவுடையோர் பிரமாணமாகத் தழுவ ஒருப்படுவரா? ஒருப்படார்! ஒருப்படார்!!

இனி ஆன்றோர் செய்யுட்கணெல்லாம் மங்கலச்சொற்க ளுண்டெனக் கூறினார்கள். இதனைக் காஞ்சியாக்கத்தில் முன்னரே எடுத்தாசங்கித்துப் பரிகரித்திருக்கின்றாம். ஆண்டுக் கண்டுகொள்க. ஈண்டும் விரிப்பிற் பெருகும்.

இனி, ஆசிரியர் ஆ

-

நச்சினார்க்கினியர் ஆனந்தக்குற்றங் கொள்வாரை மறுத்து, அகத்தியனாருந் தொல்காப்பியனாரு மதுகொண்டிலரென யாப்புறுத்தோதுதல் மேலே காட்டினா மாகலின், அவர்க்கது கருத்தன்றென நண்பர் நண்பர் கூறியது இழுக்காமென்க.

நண்பரவர்கள் இந்திரகாளிசெய்த யாமேளந்திரர் பராசைவமுனிவர், சமணரல்லரென்கின்றார்கள். இந்திர காளியென்னும் இசைநூல் செய்த யாமளேந்திரர் பரா சைவரென்பது அடியார்க்கு நல்லாருரையிற் பெறப்படுதலன்றி, பாட்டியல் செய்த யாமளேந்திரரென்பது பெறப்படவில்லை. பாட்டியல்செய்த யாமளேந்திரரும், இசை நூல் செய்த யாமளேந்திரரும் வேறென்னுங் கருத்துடையோம். இது நிற்க.

அற்றேலஃதாக நச்சினார்க்கினியருஞ் சிவஞான யோகிகளுந் தொல்காப்பியப் பாயிரவுரையினுஞ் சூத்திரவுரை யினும் 'வடக்கு' 'எழுத்து' என்பவற்றை மங்கலச் சொற் களெனக் கூறியதென்னையெனின், ஒரு நூல் தொடங்கும்வழி ஒரு நற்சொல் நிறுத்துத் தொடங்குதல் நன்றாகலின் அதுபற்றி அங்ஙனமொழிந்தாரல்லது, மங்கலச்சொன்னிறுத்தே தொடங் கல் வேண்டுமென யாப்புறுத்தானும், அங்ஙனங் கூறா தொழியின் அஃதானந்தமாமென்றானுங் கூறிற்றின் மையின் அதனான் ஈண்டைக்காவதோ ரிழுக்கமில்லை. இந்நியதியின் மையின் ஆன்றோரு நற்சொற்றொடங்கியுந் தொடங் காமையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/338&oldid=1574764" இலிருந்து மீள்விக்கப்பட்டது