உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

  • மறைமலையம் 8

வரையாது நூலியற்றினார். ஈண்டும் பிறாண்டும் யாமெடுத்துக்கொண்ட மேற்கோள் ‘ஆனந்தக் குற்றமென்பது தொல்லாசிரியர் யார்க்குமொப்ப முடிந்த தில்லை' என்பதே யாகலின், இதனை நண்பரும் பிறரும் பிறழவுணரா திருக்கக்கடவர். இது கிடக்க.

'பவணந்தி' முதலாயினாரை ‘அறியார்' 'போலிப்புலவர் என யாமெழுதியது பற்றிநண்பரவர்கள் வருந்துகின்றார்கள். யாஞ்செய்தது பிழையாயின் அதனைப் பொறுக்கும்படி வேண்டுகின்றோம். அவர்களை அங்ஙன மிகழ்ந்துரைக்க வேண்டுமென்பது கருத்தன்று. பண்டை யாசிரியர்செய்த அற்புதப்பொற்புடைய அரியநூல்களைப் பயிலவொட்டாது தடையாயெழுந்து பொருத்தமில்லனவு மிடையிடையேகூறிய அப்பவணந்தி முதலாயினார் பெற்றிமைக்கிரங்கி யெழுது கின்றுழி அச்சொற்பிரயோகஞ் செய்ய வொருப் பட்டாம். இனி, உண்மையான் நோக்க வல்லார்க்குப் வல்லார்க்குப் பவணந்தி முதலாயினார் அறிவுடைய யோராற் பெரிதுபாராட்டுதற்குரிய சீர்ப்பாடுடையரல்ல ரென்ப தினிதுபுலனாம். அவர் தொல் காப்பியனார் முதலான பண்டை நூலாசிரியர் நுட்பப்பொருள் பொதித்து விளங்குமாறு நூல்செய்தது போலத் தாமும் அங்ஙனம் விளங்க நூலியற்றினாரா? அல்லதவரின் வேறாகவேனும் புதுப் பொருள்செறித் தெழுதினாரா? தாமெழுதியவற்றை யேனும் முடித்து வரையறை தோன்ற வைத்தாரா? ஒரு சிறிதுமில்லை. தொல்காப்பியனார் கூறிய அரியபொருட் களுட் சிலவற்றை விடுத்துச் சிலவற்றை வைத்துத் தஞ்சொல்லாற் சூத்திரஞ் செய்தார். அங்ஙனஞ் செய்வுழியுந் தொல்காப்பியனார் கருத்துணர மாட்டாமல் ஒரோவிடங்

களில் வழுவியுங்கூறினார்.

ங்

தமிழிலே ஐந்திலக் கணமும்வழுவின்றி மிகச்சுரு காமலும் மிகப்பெருகாமலும் முற்றவெடுத்துமுடிவுதோன்றக் கூறியநூல் தொல்காப்பியம் ஒன்றேயாம். இந்நூலுணர்ந்தார் தமிழியலறிவு நன்குவாய்ப்பப் பெற்றா ராவர்; இவ்விழுமிய நூலையும்மாணாக்கர் பயில வொட்டாமல் பவணந்தியார் நன்னூலெழுதியது எற்றுக்கு? அற்றன்று, தொல்காப்பியம் உணர்தற்கரிதாய்ப் பெருகிக் கிடத்தலால் அதனைச் சுருக்கி நன்னூலியற்றினாரெனின்:- பெருக்கசுருக்கமென்பன அவ்விரு வகைக் குணங்களுடைய இரு நூல்கள் தோன்றினல்லாமற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/339&oldid=1574765" இலிருந்து மீள்விக்கப்பட்டது