உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

315

றாமே ஒருவர்க்கு விளங்கமாட்டா; மக்கள்மனவியற்கை எளியதொன்றனையேபற்ற முந்துறும்; அஃது அதன்கண் இயற்கையாயுள்ள மடிமைக்குணத்தினானேயாம்; நன்னூலினுஞ் சுருங்கிய நூலொன்று ஏனையொருவர் இயற்றிடுவாராயின் அதனையே யாரும் பயில முந்துறுவார்; எத்தனைபேர் மகாலிங்கையரிலக்கணம், போப்பைய ரிலக்கணம் முதலிய வற்றின் பயிற்சியோடு நின்றுவிடுகின்றார்! இனி, நன்னூல் சுருக்கமானதொன்றாயினும் அதன் பயிற்சி யொன்றானே தமிழறிவு நிரம்புமெனின் அது சால்புடைத்தாம்.

அவ்வாறின்றி அதன்க ணடங்காமல் வேறுணரற் பாலனவாம் பொருட் கூறுபாடுகள் பலவாகப்பெருகிக் கிடத்த லானும், அப்பலவுமொருங்கெடுத்து முடியக்கூறுநூல் தொல்காப்பிய மொன்றேயாதலானும் தமிழியலறிவு நிரம்ப வேண்டுவோர் தொல்காப்பியமொன்றே பயிலுதற் குரியர். தமிழியலறிவு நிரப்புதற்குரிய பொருள்களின்றி வாளாது சுருங்கிக்கிடக்கும் நூல்களைச் சுருக்கஞ் சுருக்கமென்று பயின் றாலாவதென்னை? புலமைமுற்றுதற்குரிய நூலறிவு இன்றி யமையாத தொன்றாகையால் அதுசெயவல்ல தொல் காப்பியமே வாய்ப்புடையதாம். அந்தோ! அது பெரியதொரு நூலாயிற்றே என்று மறுக்க முறுவராலெனின்:- நூனுட்ப மறியாது கடாயினாய், இஞ் ஞான்றை ஆங்கிலமொழியில் மிகவிரிந்து பரந்த பூத பௌதிகதத்துவ நூலாராய்ச்சி செய்வார்பலர்க்கும் தொல் காப்பியநூல் மிகச்சுருங்கிய தொன்றாய்த்தோன்று மாகலின் அதன்பயிற்சி நீமயங்குமாறு போற் பெரியதன்றென்று தெற்றெனத்துணிக. ஆகவே, தொல்காப்பியப்பயிற்சிக்குந் தமிழ்மொழிப் பெருக்கத்திற்கும் ஒருபேரிடையூறாய்த் தோன்றிய பவணந் தியார் எம்மனோராற் பாராட்டப் படுதற்குரியரல்லர். பிறரவரை எங்ஙனம் பாராட்டினும் பாராட்டுக. அவரவர்க்குரிய மதிப்புப்பற்றியே அவரவரைப் பாராட்டுவாமல்லது வேறுகூறக் கடமைப் பட்டிலோம். இது நிற்க. இதுகாறும் யாம்குறித்து நிகழ்த்திய வழக்குரையை நடுநிலை பிறழாது முன்போற் செவ்விதினாய்ந்து தமதரிய வபிப்பிராயம் வெளியிடுவார் களாகவென்று நம் ஆப்தர்- சண்முகம்பிள்ளை யவர்களை வேண்டிக்கொள்ளுகின்றோம்.

னந்தக்குற்றம் முற்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/340&oldid=1574766" இலிருந்து மீள்விக்கப்பட்டது