உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

21. திருக்குறட் கத்தியரூபம்

முகவுரை

தேவர் குறளுந் திருநான் மறைமுடிவு

மூவர் தமிழு முனிமொழியுங் - கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லு

மொருவா சகமென் றுணர்.

வள்ளுவர்நூ லன்பர்திரு வாசகந்தொல் காப்பியமே தெள்ளுபரி மேலழகன் செய்தவுரை - யொள்ளியசீர்த் தொண்டர் புராணந் தொகைச்சித்தி யோராறுந்

தண்டமிழின் மேலாந் தரம்.

என்னும் ஆன்றோர் திருவாக்குக்களால் தமிழ் நூல்களிலும் உரைகளிலும் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயானர் திருவாய்மலர்ந்தருளிய தமிழ்வேதமாகிய திருக் குறளும் பரிமேலழகியாருரையுமே சிறந்தனவென்று எச் சமயத்தாரும்

மெச்சும்படி நிச்சயிக்கப்பட்டன.

பாண்டியராஜாக்களாலே தாபிக்கப்பட்ட தமிழ்த்தலைச் சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என்னு முச்சங்கங்களும் ஓங்கப்பெற்ற மதுரையம்பதியிலே சிவபெருமானுடைய பிரதிபிம்பமாகத் தோன்றினவரும் பிரமவிஷ்ணுக்களாலும் அணுகலாற்றாத ஆலகாலவிடத்தைத் திருக்கரத்தில் ஏந்தின வரும், சைவசமய குரவர்களில் ஒருவருமாகிய ஸ்ரீமத் - சுந்தர மூர்த்திநாயனாராலே திருத்தொண்டர்தொகையிலே துதிக்கப் பட்ட சரசுவதியின் அவதாரமாகிய பொய்யடிமை யில்லாப் புலவர்கள் நாற்பத்தொன்பதின்மரும் ஸ்ரீமத் -சோமசுந்தரக் கடவுளாலே கொடுத்தருளப்பட்ட சங்கப் பலகையிலே கடைச்சங்கத்தாராக வீற்றிருந்து தமிழ் ஆராய்ந்துள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/341&oldid=1574767" இலிருந்து மீள்விக்கப்பட்டது