உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

317

திருக்குற ளென்னும்

காலத்திலே திருவள்ளுவதேவர் உத்தரவேதத்தை அருளிச்செய்து அக்கடைச் சங்கத்திலே அரங்கேற்றியருளினார். அப்பொழுது அசரீரி வாக்கின்படியே சங்கப்பலகை அத்திருவள்ளுவநாயனாருக்கும், முருகக் கடவுளது திருவவதாரமாய் மதுரை வைசியர் மரபிற்றோன்றிய உருத்திரசன்மருக்கும்மாத்திரமே இடங் கொடுத்தது. அது, “திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோ டுருத்தகு நற்பலகை யொக்க - விருக்க உருத்திர சன்ம ரெனவுரைத்து வானி லொருக்கவோ வென்றதோர் சொல்.

என்னு மசரீரியான வாக்கான் அறியப்படும். அதன்மேல் சரசுவதியும், அம்மெய்ப்புலவர்கள் அனைவரும் கலையுணர் புலமையிற் றலைமைபெற்றோங்கி விதிமுறையாக முதுநிலம் புரக்கும் உக்கிரப்பெருவழுதியாரும், அத்திருக்குறளுக்குச் சிறப்புப் பாயிரம் செய்ததேயன்றி ஸ்ரீமத் - சோமசுந்தரக் கடவுளுஞ் செய்தருளினார்.

நாமகள்

“நாடா முதனான் மறைநான் முகனாலிற் பாடா விடைப்பா ரதம்பகர்ந்தேன் - கூடாரை யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின் வள்ளுவன் வாயதென் வாக்கு.

66

சோமசுந்தரக்கடவுள்

"என்றும் புலரா தியாநணர்நாட் செல்லுகினு

நின்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மையதாய்க் - குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் றெய்வத் திருமலர்போன் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்.”

உக்கிரப்பெருவழுதியார்

"நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் றான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூன்முறையை வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ்

சிந்திக்க கேட்க செவி.

وو

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/342&oldid=1574768" இலிருந்து மீள்விக்கப்பட்டது