உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

மறைமலையம் - 8

என தன்னிகரில்லா

மன்னவர்பெருமான்

தான்

மேற்கொண்ட சிறப்பைப் பலரும் அறிந்து மேற்கொள்ள வ்வாறு வழிபாடுகூறினான். மன்னனெப்படி மன்னுயிரப்படி ஆகலின், இப்புத்தகத்தை முன்னேபூசித்து மெய்மொழி மனங் களால் வணக்கஞ்செய்து பின்கேட்க வேண்டுமென்று சொல்லியபடி மற்றக்கபிலர், பரணர், நக்கீரர் முதலிய சங்கப்புலவரெல்லாரும் பலவாறு புகழ்ந்தெடுத்துப்போற்றி யிதன் றெய்வ மாட்சிமை நிலையிட்ட அத்திருப்பாட் டெல்லாம் ஈண்டெடுத்துரைக்கிற் பெருகும், இதன் சிறப்புப் பாயிரமான திருவள்ளுவமாலையிற் காண்க.

இத்துணைச் சிறப்பினையுடைய திருக்குறளுக்குத் தருமர் முதல் பரிமேலழகியார் ஈறாகப் பதின்மர்கள் செய்த உரைகளில் பரிமேலழகர் செய்தவுரையே சிறந்துள்ளது; அவ்வுரையுங் கற்றோர்க்கேயன்றி மற்றோர்க்குப் பயன்படுவதாயில்லை.

ஆதலால் மற்றோர்க்கும் பயன்படும்வண்ணம் எண்ணிப் பரிமேலழகியார் உரைக்கருத்தின்படியே திருக்குறட் கத்திய ரூபஞ் செய்யத்தொடங்கினேன். அதிலுள்ள குற்றங்கணீக்கிக் குணங்கொண்டு பாராட்டுவது கற்றல், கேட்டல்களின்வல்ல ஞானச்செல்வர்கள் கடமை.

உரைப்பாயிரம்

இந்திரன்முதலிய தேவர்களுடைய பதமுத்திகளையும், முடிவில்லாத இன்பத்தையுடைய அழிவில்லாத பரமுத்தி யையும் வழியறிந்து அடைதற்குரிய மாநுடருக்கு உறுதியென உயர்ந்தோராலே எடுக்கப்பட்ட பொருள்கள் நான்கு: அவை அறம்பொருள் இன்பம் வீடுபேறு என்பனவாம். அவைகளுள் வீடுபேறெனப்படுவது மனத்தால் நினைக்கவும் வாக்கால் வசனிக்கவும் கூடாத நிலைமையை உடையதாகலால் துறவற மாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின் நூல்களாலே சொல்லப்படுவன மற்றை மூன்றுமேயாம்.

அவற்றுள் அறமாவது: மநுமுதலிய நூல்களில் விதிக்கப் பட்டவைகளைச் செய்தலும் விலக்கப்பட்டவைகளை ஒழித்தலு மாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம், என மூவகைப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/343&oldid=1574769" இலிருந்து மீள்விக்கப்பட்டது